வாழைப்பழம் இருந்தா போதும் சட்டுனு நாவில் கரையும் ஒரு ஸ்வீட் செஞ்சி அசத்திடலாம்! ஆரோக்கியம் தரும் இந்த சுவீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வாழைப்பழம் ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள்: நேந்திரம் பழம் – ஒரு கிலோ, நெய் – 2 ஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு கப், வெல்லம் – 400 கிராம், ஏலக்காய் – 5, சர்க்கரை – 2 டீஸ்பூன். -
- வாழைப்பழம் ஸ்வீட் செய்முறை விளக்கம்: இந்த ஸ்வீட் செய்வதற்கு நேந்திரம் வாழைப்பழம் சிறந்த தேர்வாக இருக்கும். நேந்திரம் வாழைப்பழம் தான் சட்டென கரைந்து பஞ்சாமிர்தம் போல ஆகிவிடாமல் அப்படியே கெட்டியான தன்மையுடன் இருக்கும். இந்த ஸ்வீட் செய்வதற்கு வாழைப்பழம் இப்படித்தான் இருக்க வேண்டும். எனவே நேந்திரம் பழத்தை ஒரு கிலோ எடுத்து இந்த ஸ்வீட் செய்து பாருங்கள். நேந்திரம் பழத்தை தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் வைத்து சமைக்கும் பொழுது நேந்திரம் பழம் கரையாமல் முழுதாக அப்படியே இருக்க வேண்டும்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வையுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் விடுங்கள். நெய் கரைந்ததும் வெட்டி வைத்துள்ள நேந்திரம் வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து பொன் முறுவலாக
வறுக்க வேண்டும். நீங்கள் வறுக்க வறுக்க வாழைப்பழத் துண்டுகள் இரண்டு புறமும் பொன்னிறமாக மாற ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் ஒரு கப் அளவிற்கு தேங்காய் துருவலை முழுவதுமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு முழு தேங்காயை பூ போல துருவி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எந்த அளவிற்கு அதிகமாக சேர்க்கிறோமோ, அந்த அளவிற்கு இந்த ஸ்வீட் ருசியாக இருக்கும்.வாழைப்பழத்துடன் சேர்ந்து தேங்காய் வதங்கி வரும் வேளையில் பொடிப்பொடியாக துருவி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்க வேண்டும். நீங்கள் தேங்காய் துருவும் துருவியில் வெல்லத்தை துருவி வைத்துக் கொண்டால் நாம் சமைக்கும் பொழுது சீக்கிரமாக கரையும். வெல்லம் கரைந்து வரும் வரை காத்திருக்க வேண்டும். வெல்லம் கரைந்து தளர்ந்த உடன் ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து தூளாக்கி அதனை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தண்ணீர், பால் போன்ற எந்த பொருட்களையும் இதனுடன் சேர்க்கக்கூடாது. வெல்லத்தில் இருந்து வந்த நீரிலேயே வேக வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கிண்டி விட்டால் ஸ்வீட் கெட்டிப்படும். ஸ்வீட் கெட்டியான பதத்திற்கு வந்ததும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலந்து அடுப்பை அணைத்து ஆற விட வேண்டியது தான்.
ஆறியதும் தட்டில் வைத்து பரிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாயில் எச்சில் ஊற கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு தீர்த்து விடுவார்கள். இந்த வாழைப்பழ ஸ்வீட் நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடுங்கள்.
No comments:
Post a Comment