tasty-andhra-kara-chutney(உங்ககிட்ட காஞ்ச மிளகாய் இருந்தா போதும் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கார சட்னி 2 நிமிடத்தில் செய்துவிடலாம்! இட்லி, தோசைக்கு இதை விட சூப்பரான சைட் டிஷ் கிடையாது.) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 13 November 2021

tasty-andhra-kara-chutney(உங்ககிட்ட காஞ்ச மிளகாய் இருந்தா போதும் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கார சட்னி 2 நிமிடத்தில் செய்துவிடலாம்! இட்லி, தோசைக்கு இதை விட சூப்பரான சைட் டிஷ் கிடையாது.)

உங்ககிட்ட காஞ்ச மிளகாய் இருந்தா போதும் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கார சட்னி 2 நிமிடத்தில் செய்துவிடலாம்! இட்லி, தோசைக்கு இதை விட சூப்பரான சைட் டிஷ் கிடையாது.


ஆந்திரா என்றாலே நமக்கு காரம் தான் முதலில் நினைவிற்கு வருகிறது. காரசாரமான சமையல் முறையில் பெயர் போனது ஆந்திரா. எல்லா வகை உணவுகளிலும் காரத்தை விரும்பும் இவர்களுக்கு மிக ருசியான உணவையும் கொடுக்க தெரியும். அதிலும் குறிப்பாக சட்னி, ஊறுகாய் போன்றவற்றை செய்வதில் இவர்களை அடிச்சிக்க ஆளே கிடையாது. அந்த அளவிற்கு ருசி மிகுந்த சட்னி வகைகளை செய்யும் ஆந்திரா சமையலில் காரசாரமான இந்த காரச் சட்னி எப்படி செய்வார்கள்? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

ஆந்திரா ஸ்பெஷல் கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்: வர மிளகாய் – 20, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, புளி – நெல்லிக்காய் அளவிற்கு, பூண்டு பற்கள் – 4, நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு.

ஆந்திரா ஸ்பெஷல் கார சட்னி செய்முறை விளக்கம்: முதலில் காய்ந்த மிளகாயை 20 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். நீள நீளமாக இருக்கும் காய்ந்த மிளகாய்களை எடுக்க வேண்டும். குண்டாக இருக்கும் குண்டு காய்ந்த மிளகாய் தேவையில்லை. அது அதிக காரத்தை கொடுக்கும் எனவே வர மிளகாய்களை 20 எடுத்துக் கொண்டு அதனை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். ஒரு பத்து நிமிடம் இப்படியே ஊற வைத்தால் தான் அரைக்கும் பொழுது நைஸாக அரைபடும்.

பின்னர் மிக்ஸி ஜார் ஒன்றை கழுவி எடுத்துக் கொள்ளவும். அதில் ஊற வைத்த வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலையை நீங்கள் எந்த அளவிற்கு எடுக்கிறீர்களோ, அந்த அளவிற்கு சட்னி ருசியாக இருக்கும். எனவே கருவேப்பிலையை சேர்ப்பதில் கஞ்சத்தனம் காட்ட வேண்டிய அவசியமில்லை. மேலும் கருவேப்பிலையை வேண்டாம் என்று ஒதுக்கி விடுபவர்களுக்கு இந்த சட்னியின் மூலம் கறிவேப்பிலையின் சத்து முழுமையாக கிடைக்கும். எனவே அடிக்கடி இதனை செய்து கொடுப்பதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் கறிவேப்பிலையில் இருந்து கிடைக்கக்கூடிய நலன்களும் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

கருவேப்பிலைகளை கழுவி உருவி சேர்த்துக் கொண்ட பின்பு, புளியை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதனையும் இதனுடன் சேர்த்த பின்பு, 4 பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சேர்த்து நைசாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு மற்ற எண்ணெய்களை காட்டிலும் நல்லெண்ணெய் ஊற்றுவது தான் நல்லது. மிளகாய் சூட்டை உண்டாக்கும் என்பதால் நல்லெண்ணெய் ஊற்றி சமைப்பதால் குளிர்ச்சியாகி விடும்.

எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் அதில் ஒரு கொத்து கறிவேப்பிலையை தாளிக்க போடுங்கள். பின்னர் பொடிப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் பொன் முறுகலாக வதங்கி வரும் வேளையில் அரைத்து வைத்துள்ள சட்னியை கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயின் சூட்டிலேயே சட்னி வெந்து, பூண்டின் பச்சை வாசம் நீங்கிவிடும். அவ்வளவுதாங்க ரொம்ப சுலபமாக ரெண்டே நிமிடத்தில் சட்டென செய்து அசத்த கூடிய இந்த கார சட்னி அலாதியான சுவையைக் கொடுக்கும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்கும் இந்த ஆந்திரா கார சட்னியை இதே முறையில் செய்து நீங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடுங்கள்.


No comments:

Post a Comment