hai-protein-weight-loss-dosai(உங்கள் உடல் எடை அதி வேகமாக குறைந்து நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த புரோட்டீன் சத்துள்ள சுவையான தோசையை காலை உணவாக சாப்பிடுங்கள்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 13 November 2021

hai-protein-weight-loss-dosai(உங்கள் உடல் எடை அதி வேகமாக குறைந்து நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த புரோட்டீன் சத்துள்ள சுவையான தோசையை காலை உணவாக சாப்பிடுங்கள்)

oats

உங்கள் உடல் எடை அதி வேகமாக குறைந்து நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த புரோட்டீன் சத்துள்ள சுவையான தோசையை காலை உணவாக சாப்பிடுங்கள்


உடல் மிகவும் சிக்கென்று அழகாக இருக்க வேண்டும் என்று தான் பெண்கள், ஆண்கள் இவர்கள் இருவருக்குமே இருக்கின்ற பொதுவான ஆசையாகும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் உணவு கட்டுப்பாடு இல்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், பெண்கள் தங்களின் உணவு பழக்கத்தை சரிவர கடைபிடிக்காமல் இருப்பதாலும், இப்பொழுது உள்ள உணவு வகைகளில் அதிக அளவில் வேதியல் பொருட்கள் கலந்து வருவதாலும் பலருக்கு உடல் எடை அதிகரிக்கிறது. இந்த உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இந்த உடல் எடையை எளிதாகக் குறைத்து, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இந்த தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்ள நல்ல பலனைக் கொடுக்கிறது. வாருங்கள் இந்த தோசையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: ஓட்ஸ் – 50 கிராம், கடலை மாவு – 50 கிராம், அரைக் கீரை – ஒரு கைப்பிடி, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, சில்லி ஃப்ளேக்ஸ் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், தயிர் – ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு, மிளகு தூள் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

செய்முறை: முதலில் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். அதன் பின் 50 கிராம் ஓட்ஸை கடாயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கி கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் 100 கிராம் கடலை மாவு மற்றும் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இந்த கலவையை 20 நிமிடம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொண்டு, அதனுடன் சிறிய துண்டு இஞ்சியை காய் துருவல் மூலம் துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி அதனையும் இவற்றுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அரை ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ், அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், முக்கால் ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கைப்பிடி அரைக் கீரை மற்றும் கொத்தமல்லி தழையை தண்ணீரில் அலசி, பொடியாக நறுக்கிக் கொண்டு இந்த கலவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் ஊற வைத்துள்ள மாவுடன் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவை விட சற்று கெட்டியான பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பின் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து இந்த மாவை வைத்து தோசை ஊற்றி, அதன் மீது ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இரண்டு புறங்களிலும் சிவந்து வருமாறு திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இவ்வாறு கலந்து வைத்துள்ள அனைத்து மாவையும் தோசையாக ஊற்றி கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான டயட் தோசை தயாராகிவிட்டது. இதனை வெறும் வாயில் அப்படியே சாப்பிடலாம். அல்லது இதனுடன் தொட்டுக்கொள்ள ஏதேனும் சட்னி செய்தும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment