suvayana-2-dishesh-in-palaya-sadham(இந்த மழைக்காலத்தில் மீதியான பழைய சாதத்தை இவ்வாறு செய்து பாருங்கள். ஒரு பருக்கை சாதம் கூட வீணாகாமல் இருக்கும்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 13 November 2021

suvayana-2-dishesh-in-palaya-sadham(இந்த மழைக்காலத்தில் மீதியான பழைய சாதத்தை இவ்வாறு செய்து பாருங்கள். ஒரு பருக்கை சாதம் கூட வீணாகாமல் இருக்கும்)

rice

இந்த மழைக்காலத்தில் மீதியான பழைய சாதத்தை இவ்வாறு செய்து பாருங்கள். ஒரு பருக்கை சாதம் கூட வீணாகாமல் இருக்கும்


வீட்டிலுள்ள பெண்கள் என்னதான் அளவான பக்குவத்தில் சாதத்தை வடித்து வைத்தாலும் சில சமயங்களில் சிறிதளவு சாதமாவது மீதியாக தான் செய்யும். அதனை வீட்டில் உள்ள பெண்கள் எடுத்துவைத்து மறுநாள் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த மழை காலத்தில் அதனை சாப்பிடுவதற்கு அவ்வளவு விருப்பமானதாக இருக்காது. அப்படியும் அதை சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற உடல்நலக் குறைபாடு ஏற்படும். எனவே இந்த சாதத்தை வீணாகாமல் இருக்க இங்கு கூறப்பட்டுள்ள புதிய வகை 2 டிஷ்களை செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் இது பழைய சாதம் என்றும் தெரியாமல் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம.

பூண்டு சாதம் செய்முறை: ஒரு சிறிய உடலில் 10 பல் பூண்டு ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூள் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும் பின்னர் இந்த மசாலாவை நீதியான ஒரு கப் பழைய சாதத்துடன் சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் உளுந்து, அரை ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக பொறிந்ததும் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி விட்டு, கலந்து வைத்துள்ள சாதத்தையும் இவற்றுடன் சேர்த்து நன்றாக பிரட்டி விடவேண்டும். ஐந்து நிமிடத்தில் சுட சுட சுவையான பூண்டு சாதம் தயாராகிவிடும்.

பக்கோடா செய்முறை: ஒரு கப் பழைய சாதத்துடன் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி, உருளைக்கிழங்கு மேஷர் பயன்படுத்தி நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரை கப் கடலை மாவுடன் அரை ஸ்பூன் தனி மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், 2 சிட்டிகை மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கலந்து வைத்துள்ள சாதத்தை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட வேண்டும். இவை நன்றாக எண்ணெயில் பொரிந்ததும் கரண்டியைப் பயன்படுத்தி தனியாக எடுத்து வைக்க வேண்டும். கலந்து வைத்துள்ள அனைத்து கலவையையும் இவ்வாறு எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டும்.

இவ்வாறு பழைய சாதத்தை விதவிதமாக செய்து கொடுத்தோம் என்றால் சாதம் வீணாகாமல் வீட்டில் உள்ள அனைவரையும் விருப்பமாக சாப்பிட வைக்க முடியும். இந்த இரண்டு டிஷ்களை நீங்களும் உங்கள் வீட்டில் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். மிகவும் அருமையாக இருக்கும்.

2 comments:

  1. emperor casino,【WG98.vip】best sports betting,top sportsbook
    emperor casino,【WG98.vip】best sports betting,top sportsbook,best sportsbook,best esports rb88 picks,best esports picks,best football 온카지노 tipsters,best 제왕카지노 tipster

    ReplyDelete