sweet-stal-style-medhu-pakoda(மழைக்காலத்தில் நினைத்த உடனே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டென்று செய்யக்கூடிய சுவையான பக்கோடா ரெசிபி) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 13 November 2021

sweet-stal-style-medhu-pakoda(மழைக்காலத்தில் நினைத்த உடனே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டென்று செய்யக்கூடிய சுவையான பக்கோடா ரெசிபி)

pakoda

மழைக்காலத்தில் நினைத்த உடனே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டென்று செய்யக்கூடிய சுவையான பக்கோடா ரெசிபி


தீபாவளிக்கு முன்னதாகவே மழை ஆரம்பித்துவிட்டது. தீபாவளி அன்றும் அதனைத் தொடர்ந்தும் இதுவரை மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் மாலை வேளையில் குளிருக்கு சுடசுட எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அது போன்ற நேரங்களில் கடைகளுக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கி வர முடியாது. ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுவையான இந்த மெது பக்கோடாவை சட்டென செய்து முடிக்கலாம். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இதனை மிகவும் சீக்கிரமாகவும், சுலபமாகவும் செய்து விடலாம். வாருங்கள் இதனை எவ்வாறு சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: கடலை மாவு – அரை கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – அரை கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், சோடா உப்பு – கால் ஸ்பூன், பெருங்காய தூள் – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, எண்ணெய் – கால் லிட்டர், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை: முதலில் பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் கட்டிகள் இல்லாமல் சல்லடை பயன்படுத்தி சலித்து எடுக்க வேண்டும். பின்னர் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் 2 பச்சை மிளகாயையும் சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். பிறகு ஒரு துண்டு இஞ்சியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அவ்வாறே கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் கால் ஸ்பூன் சோடா உப்பு மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அதன் பின் அரை கப் கடலை மாவு, அரை கப் பொட்டுக்கடலை மாவு மற்றும் அரை கப் அரிசிமாவு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்துவிட வேண்டும்.

பிறகு இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் தனி மிளகாய் தூள், அரை ஸ்பூன் சோம்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையையும் சேர்த்து, அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உருண்டை பிடிக்கும் பதத்திற்க்கு பிசைந்து கொள்ள வேண்டும்.பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மெது பக்கோடா தயாராகிவிட்டது.

1 comment:

  1. Casino.com® (ALT-1002) Casino | MapYRO
    Casino.com® (ALT-1002) is the most comprehensive casino 시흥 출장안마 information portal in the 인천광역 출장안마 area. We 화성 출장마사지 provide casino information, reviews and 경산 출장마사지 information about 아산 출장샵

    ReplyDelete