fruit-salad-with-juice(என்றென்றும் இளமையா இருக்கணும்னு உங்களுக்கு ஆசையா இருக்கா? தினமும் 1 கப் இதை சாப்பிடுங்க போதும்.) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 13 November 2021

fruit-salad-with-juice(என்றென்றும் இளமையா இருக்கணும்னு உங்களுக்கு ஆசையா இருக்கா? தினமும் 1 கப் இதை சாப்பிடுங்க போதும்.)


froot

என்றென்றும் இளமையா இருக்கணும்னு உங்களுக்கு ஆசையா இருக்கா? தினமும் 1 கப் இதை சாப்பிடுங்க போதும்.


இளமையாக இருக்க வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் வாழ்க்கையில் முதுமை என்ற ஒன்று கட்டாயம் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் வரத்தான் செய்யும். ஆனால் எப்போதுமே சந்தோஷமாக இருந்துகொண்டு, மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் முதுமையை தள்ளிப் போடலாம். அப்படி ஒரு உணவைத்தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறோம். இதற்கு சமைத்து கஷ்டப்பட வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. சமைக்காமல் அப்படியே தயார் செய்து சாப்பிடக்கூடிய, உடலுக்கு இளமையைக் கொடுக்கக்கூடிய இரண்டு ரெசிபி உங்களுக்காக.

முதலாவதாக நாம் பார்க்கப்போகும் ரெசிப்பி ஃப்ரூட் சாலட். உங்களுக்கு என்னென்ன பழவகைகள் பிடித்திருக்கின்றதோ. அதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இன்னைக்கு நாம பாக்கப் போற ரெசிபியில் 3 பழ வகைகள் சேர்த்து சுவையான ஃப்ரூட் சாலட் தயார் செய்யப் போகின்றோம்.

வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் இந்த மூன்று பழங்களையும் தோல் நீக்கி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்று பழங்களில் இருந்தும் 1/2 கப் அளவு எடுத்து தனியாக ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். (ஒவ்வொரு படத்திலிருந்தும் 1/2 கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.) நறுக்கிய இந்த பழத்தோடு தேங்காய்ப் பால் 1 கப் சேர்த்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதன் பின்பு, காலை நேர உணவாக இதை எடுத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதில் சேர்க்கக்கூடிய பழவகைகளை உங்களுக்கு பிடித்த பழ வகைகளாக மாற்றி மாற்றி சேர்த்து கலந்து சாப்பிட்டால் காலை நேரத்தில் நிறைவான உணவாக இருக்கும். ஆனால் காலையில் இந்த உணவை சாப்பிட்ட பிறகு, அதன் பின்பு நன்றாக பசி எடுத்த பின்பு மதிய உணவு சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இப்படி ஒரு ஆரோக்கியமான உணவை காலையில் நாம் சாப்பிட்டு வந்தால் நம்முடைய இளமை தோற்றம் அழகு மேம்படும்.

சரிங்க இந்த ஃப்ரூட் சாலட் சாப்பிட்டு ரொம்பவும் போர் அடிக்குது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, இல்லை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேறு ஒரு ஜூஸ் ஏதாவது குடிக்கலாமா என்று நினைத்தால் இந்த ஜூஸ் குடிங்க. உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இரும்பு சத்து அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்‌.



நெல்லிக்காய் 2, பீட்ரூட் ஒரு சிறிய துண்டு, இஞ்சி ஒரு இன்ச், கருவேப்பிலை 2 கொத்து, இந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். பீட்ரூட்டை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். இஞ்சியைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். கருவேப்பிலையும் போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த 4 பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜூஸுடன் ஒரு ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் பெறும். ட்ரை பண்ணி பாருங்க. மேலே சொன்ன இரண்டு விஷயமும் ஆரோக்கியம் தரக்கூடிய விஷயம்.
அடுப்பு பற்ற வைக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. ரொம்ப ரொம்ப ஈசியா செஞ்சிடலாம். தினமும் சாப்பிட முடியவில்லை என்றாலும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது இப்படி சத்து நிறைந்த உணவை சோம்பேறித்தனம் படாமல் சாப்பிடப் பழகுங்கள். ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது.

No comments:

Post a Comment