ஸ்வீட் கார்ன் குருமா
தேவையான பொருட்கள்:
* ஸ்வீட் கார்ன் - 3/4 கப்
* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* பால் - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கிராம்பு - 1
* பட்டை - 1/4 இன்ச் துண்டு
* ஏலக்காய் - 1
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1
* பச்சை மிளகாய் - 1
செய்முறை:
* முதலில் குக்கரில் ஸ்வீட் கார்னைப் போட்டு, போதுமான நீரை ஊற்றி, உப்பு சேர்த்து
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். அதே வேளை ஒரு டீஸ்ஸ்பூன் பாலில் கசகசாவை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் துருவிய தேங்காயை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தக்காளியை நன்கு மென்மையாக வதக்கி இறக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த தேங்காய், வதக்கிய தக்காளி, சோம்பு, பாலில் ஊற வைத்த கசகசாவைப் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய்
சேர்த்த தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி, சிறிது நீர் ஊற்றி, பின் பாலையும் ஊற்றி கிளறி, 3-5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி கெட்டியாக இருப்பது போல் இருந்தால், சிறிது நீர் ஊற்றிக் கொண்டு, வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வேக வைத்துள்ள ஸ்வீட் கார்னை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஸ்வீட் கார்ன் குருமா தயார்.
No comments:
Post a Comment