arisi-payasam-seimurai(அரை கப் அரிசி இருந்தால் போதும் சுடச்சுட சுவையான பாயாசம் இப்படி செய்து வீட்டில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாமே!) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 13 November 2021

arisi-payasam-seimurai(அரை கப் அரிசி இருந்தால் போதும் சுடச்சுட சுவையான பாயாசம் இப்படி செய்து வீட்டில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாமே!)

thengai-payasam2

அரை கப் அரிசி இருந்தால் போதும் சுடச்சுட சுவையான பாயாசம் இப்படி செய்து வீட்டில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாமே!



அரை கப் அரிசி இருந்தா ஆறு பேர் சாப்பிடற அளவுக்கு சுட சுட அரிசி பாயாசம் நொடியில் செய்து அசத்தி விடலாம். எப்போதும் ஒரே மாதிரியான பாசிப்பருப்பு, சேமியா, ஜவ்வரிசி பாயாசம் போலல்லாமல் இந்த அரிசி பாயாசம் ரொம்பவே வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். தின்னத் தின்னத் திகட்டாத இந்த அரிசி பாயாசம் ஒருமுறை நீங்கள் செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கண்டிப்பாக செய்ய சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு அலாதியான சுவையுள்ள இந்த அரிசி பாயாசத்தை எப்படி செய்ய வேண்டும்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

அரிசி பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்: நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு – 15, பாதாம் பருப்பு – 8, உலர் திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி – 50 கிராம், சர்க்கரை – அரை கப், பால் – அரை லிட்டர், ஏலக்காய்த் தூள் – கால் டீஸ்பூன்.

அரிசி பாயாசம் செய்முறை விளக்கம்: முதலில் இந்த பாயாசத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பாயாசத்திற்கு அதிக நெய் தேவைப்படாது. நட்ஸ் வகைகள் உங்களிடம் எது இருந்தாலும் அதனை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதைகள் என்று உங்களுக்கு விருப்பமான மற்றும் உங்களிடம் இருக்கும் நட்ஸ் வகைகளை அதிகம் சேர்த்தால் சுவையாக இருக்கும். ஏலக்காய் தூள் இல்லையென்றால் ஏலக்காயை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு காய விடுங்கள். நெய் காய்ந்து வந்ததும் அதில் பொடித்து வைத்துள்ள நட்ஸ் வகைகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். உலர் திராட்சையையும் சேர்த்து இதே போல வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே நெய்யில் நீங்கள் அரிசியை சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அரிசி பச்சரிசி புழுங்கல், அரிசி பாஸ்மதி, பாஸ்மதி அரிசி என்று எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை. அரிசி பொன்னிறமாக வறுபட்டதும் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஆற விட்டு கொள்ளுங்கள். அரிசி ஆறியதும் மிக்ஸியை இயக்கி கொரகொரவென்று அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் கால் கப் அளவிற்கு மட்டும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து விட்டுக் கொண்டே வாருங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. சர்க்கரை கரைந்து பொன்னிறமாக ஆகும் வரை கிண்டி விடுங்கள். கோல்டன் நிறத்திற்கு வந்ததும் அதனுடன் அரை லிட்டர் அளவிற்கு முழுக் கொழுப்புள்ள பாலை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அப்படியே சேருங்கள். ஒரு ஐந்து நிமிடம் கொதி வரும் வரை ஓரங்களில் ஏடு படிய விடாமல் கிண்டிக் கொண்டே இருங்கள்.

பால் கொதித்து வந்ததும் அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை சேருங்கள். அரிசி வெந்து பாயாசம் கெட்டியான பதத்திற்கு வரும். அப்பொழுது மீதமிருக்கும் அரை கப் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். நீங்கள் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூளை சேருங்கள். இவை நன்கு கொதித்து வந்த பின்பு நீங்கள் நெய்யில் வறுத்த நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு ஐந்து நிமிடம் நன்கு கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆற விடுங்கள். ஆற விட்டால் இன்னும் கெட்டியாகும் எனவே அதனை மனதில் வைத்துக் கொண்டு எந்த அளவிற்கு கொதிக்க விட வேண்டுமோ! அந்த அளவிற்கு கொதிக்க விடுங்கள். அவ்வளவுதாங்க! ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த அரிசி பாயாசம் செம டேஸ்டா இருக்கும். நீங்களும் இதே முறையில் உங்கள் வீட்டில் செய்து பார்த்து அனைவரின் இடம் பிடித்து விடுங்கள்.



No comments:

Post a Comment