simple-javvarisi-lattu-at-home(ஜவ்வரிசியை வைத்து செய்யக்கூடிய இந்த புதுவிதமான ஸ்வீட்டை நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். வாயில் வைத்த உடனே கரைந்துவிடும்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 13 November 2021

simple-javvarisi-lattu-at-home(ஜவ்வரிசியை வைத்து செய்யக்கூடிய இந்த புதுவிதமான ஸ்வீட்டை நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். வாயில் வைத்த உடனே கரைந்துவிடும்)

javvarisi-laddu

ஜவ்வரிசியை வைத்து செய்யக்கூடிய இந்த புதுவிதமான ஸ்வீட்டை நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். வாயில் வைத்த உடனே கரைந்துவிடும்

பொதுவாக வீடுகளில் நினைத்தவுடன் செய்யக் கூடிய ஸ்வீட் வகைகள் என்றால் பாயசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் போன்றவை மட்டும் தான். மிகவும் சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்ய கூடிய இவற்றிற்க்கு தேவையான பொருட்களும் மிகவும் குறைவாகத் தான் இருக்கும். ஆனால் இதுவரை பாயாசம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்திய ஜவ்வரிசியை வைத்து இந்த ஸ்வீட்டை ஒரு முறை செய்து பாருங்கள். மிகவும் எளிமையான பொருட்களை வைத்து சட்டென்று நினைத்த உடனே இதனை செய்து விடலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: நைலான் ஜவ்வரிசி – ஒன்றரை கப், சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, பாதாம் பருப்பு – 10, முந்திரிப் பருப்பு – 10, நெய் – 3 ஸ்பூன்.

செய்முறை: முதலில் ஒன்றரை கப் ஜவ்வரிசியை இரண்டு, மூன்று முறை தண்ணீர் ஊற்றி கழுவி, அதில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஜவ்வரிசி நன்றாக ஊறிய பிறகு அதனை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி தண்ணீரை மட்டும் வடித்து ஜவ்வரிசியை தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.


பிறகு ஒன்றரை கப் சர்க்கரையை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, அதில் 2 ஸ்பூன் நெய்யை ஊற்ற வேண்டும். அதில் பாதாம் மற்றும் முந்திரியை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொண்டு நெய்யில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

பின்னர் அதே கடாயில் ஜவ்வரிசியை சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து, சிறிது நேரம் கலந்து கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரம் இவ்வாறு கலந்து கொண்டே இருக்க ஜவ்வரிசி நன்றாக வெந்து விடும். இதனை கையில் எடுத்து லேசாக அழுத்திப் பார்த்தால் அது மாவு போன்று மசிய வேண்டும். ஜவ்வரிசி அந்தப் பதத்திற்க்கு வந்தவுடன் பொடியாக்கி வைத்துள்ள சர்க்கரை பவுடரை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொண்டு வருகையில், சர்க்கரை முழுவதும் ஜவ்வரிசியுடன் சேர்ந்து கரைந்து விடும். பின்னர் அரை ஸ்பூன் ஏலக்காய் பவுடர், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்பு அடுப்பை அனைத்து விட்டு, பொன்னிறமாக வறுத்து வைத்த முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பை இதனுடன் சேர்த்து இறுதியாக ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளலாம். அல்லது அப்படியே ஒரு கிண்ணத்தில் பரிமாறி கொடுத்து மற்றவர்களுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

No comments:

Post a Comment