suvayana-ennai-kaththarikai-kulambu(பார்த்தவுடனே நாவில் எச்சி ஊறும் சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை புளி சேர்க்காமல் இப்படிக்கூட செய்யலாமா இதுவரை தெரியாமல் போயிற்றே) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 13 November 2021

suvayana-ennai-kaththarikai-kulambu(பார்த்தவுடனே நாவில் எச்சி ஊறும் சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை புளி சேர்க்காமல் இப்படிக்கூட செய்யலாமா இதுவரை தெரியாமல் போயிற்றே)

brinjal

பார்த்தவுடனே நாவில் எச்சி ஊறும் சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை புளி சேர்க்காமல் இப்படிக்கூட செய்யலாமா இதுவரை தெரியாமல் போயிற்றே

சாதத்துடன் சேர்த்து சாப்பிட சாம்பார், ரசம், கீரை என்று இந்த குழம்பு வகைகளை விட சற்று காரசாரமாக இருக்கும் புளிக்குழம்பு, காரக்குழம்பு மற்றும் மீன் குழம்பு இவைதான் எப்பொழுதும் மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். அதிலும் சற்று எண்ணெய் கூடுதலாகவும் கத்தரிக்காய் சேர்த்து செய்யும் இந்த எண்ணை கத்திரிக்காய் குழம்பு சுடசுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும் இந்த குழம்பை பார்த்த உடனே பசி இல்லாதவர்களுக்கு கூட உடனே பாதித்துவிடும் இவ்வாறு பார்த்த உடனே பசியை தூண்டும் இந்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 3, எண்ணெய் – 50 கிராம், தனியாத்தூள் – ஒரு ஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, ஏலக்காய் – 3, லவங்கம் – 3, சோம்பு – அரை ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 2, தேங்காய் – 2 சில்லு, உப்பு – ஒன்றரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை: முதலில் கால் கிலோ கத்தரிக்காயை நான்காக கீறிக் கொண்டு, தண்ணீரில் போட்டுக் கொள்ள வேண்டும், பிறகு சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு சில்லு தேங்காயை தேங்காய் துருவல் பயன்படுத்தி துருவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அரை ஸ்பூன் சோம்பு, ஒரு லவங்கம்,ஒரு ஏலக்காய், சிறிய துண்டு பட்டை மற்றும் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் மீது வைத்து 50 கிராம் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் 2 லவங்கம், 2 ஏலக்காய், சிறிய துண்டு பட்டை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கீறி வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் பச்சை மிளகாயை இவற்றுடன் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு ஒன்றரை ஸ்பூன் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை இதனுடன் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்கவிட்டு இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

No comments:

Post a Comment