restaurant-style-dragon-chicken-recipe(ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday 7 November 2021

restaurant-style-dragon-chicken-recipe(ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன்)

Restaurant Style Dragon Chicken Recipe In Tamil

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன்

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம் (நீள நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)

* கொத்தமல்லி - சிறிது

* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

ஊற வைப்பதற்கு...

* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்

* மிளகாய் பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

* முட்டை - 1

* மைதா - 1/2 கப்

* சோள மாவு - 1/4 கப்

* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* மிளகு - 1 டீஸ்பூன்

* அஜினமோட்டோ - 1/4 டீஸ்பூன்

சாஸ் தயாரிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் - 3

* முந்திரி - 20

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* பெரிய குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்

* தக்காளி கெட்சப் - 1/4 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

* அஜினமோட்டோ - 1/4 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)

* சர்க்கரை - 2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் சிக்கன் நன்கு கழுவி, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மிளகாய் பூண்டு விழுது, சோயா சாஸ், தக்காளி கெட்சப், உப்பு, அஜினமோட்டோ, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் நன்கு நீர் வற்றி சற்று கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் தயார்.

No comments:

Post a Comment