தீபாவளி ஸ்பெஷல்: மிளகு தட்டை
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 1 கப்
* உளுத்தம் மாவு - 1/4 கப்
* கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 2 டீஸ்பூன் (லேசாக பொடித்துக் கொள்ளவும்)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
* எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் அரிசி மாவை சேர்த்து லேசாக வறுத்து இறக்கி, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் உளுத்தம் மாவு சேர்த்து லேசாக வறுத்து, அதே பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் உப்பு, மிளகு, கடலை பருப்பு, பேக்கிங் சோடா, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் மற்றும் சிறிது நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை எடுத்து, பிசைந்து வைத்துள்ள மாவில் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின் அதை தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை எண்ணெயில் போட்டு குறைவான தீயில் பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்,
சுவையான மிளகு தட்டை தயார்.
No comments:
Post a Comment