perfect-chenna-masala-in-home(சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையான இந்த கொண்டைக்கடலை கறியை இவ்வாறு மசாலா அரைத்து செய்து பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 13 November 2021

perfect-chenna-masala-in-home(சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையான இந்த கொண்டைக்கடலை கறியை இவ்வாறு மசாலா அரைத்து செய்து பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்)

chenna

சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையான இந்த கொண்டைக்கடலை கறியை இவ்வாறு மசாலா அரைத்து செய்து பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்


இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட சாம்பார், சட்னி மிகவும் ஏதுவானதாக இருக்கும். ஆனால் சப்பாத்திக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிட இவை இரண்டுமே ஏற்றதாக இருக்காது. சப்பாத்திக்கு ஏற்ற ஒரு சைடிஷ் என்றால் அது சென்னா மசாலா மட்டும் தான். ஆனால் ஒரு சிலருக்கு இதனை சுவையாக செய்ய தெரியாது. இதனை சரியான பக்குவத்தில் செய்தால் மட்டுமே சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இந்த பதிவில் எப்படி ஒரு ருசியான கொண்டைக்கடலை கிரேவியை செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் தெரிந்து கொள்ளவிருக்கிறோம். வாருங்கள் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: வெள்ளை கொண்டைக்கடலை – 300 கிராம், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, தேங்காய் – 2 சில்லு, தனியா தூள் – 2 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா – ஒரு ஸ்பூன், மிளகு தூள் – கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, பட்டை சிறிய துண்டு – 1, சோம்பு – ஒரு ஸ்பூன், கல்பாசி – அரை ஸ்பூன், கிராம்பு – 2, முந்திரி – 10, எண்ணெய் – 5 ஸ்பூன், உப்பு – ஒனாறரை ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

செய்முறை: கொண்டை கடலை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்து அதன் பின்னர் அதனை குக்கரில் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும் பிறகு குக்கரில் 2 கொண்டைக்கடலையை தனியாக எடுத்து ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இரண்டு சில்லு தேங்காயை காய் துருவலை பயன்படுத்தி நன்றாக துருவிக் கொண்டு, அதனை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் ஒரு பிரிஞ்சி இலை, சிறிய துண்டு பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி போன்ற அனைத்தையும் சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொண்டு, பின்னர் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், மற்றும் தனியா தூள் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் சீரகத்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் வேகவைத்த கடலையையும் இதனுடன் சேர்த்து, அரைத்து வைத்த மசாலா, அரை ஸ்பூன் கரம் மசாலா, கால் ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் வேக வைத்த கடலையில் இருந்த தண்ணீரையும் ஊற்றி மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும். இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.


No comments:

Post a Comment