tasty-brinjal-briyani-at-home(இவ்வாறு கத்தரிக்காய் வைத்து செய்யக்கூடிய ஒரு அசத்தலான பிரியாணியை ஒரு முறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 13 November 2021

tasty-brinjal-briyani-at-home(இவ்வாறு கத்தரிக்காய் வைத்து செய்யக்கூடிய ஒரு அசத்தலான பிரியாணியை ஒரு முறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்)

brinjal

இவ்வாறு கத்தரிக்காய் வைத்து செய்யக்கூடிய ஒரு அசத்தலான பிரியாணியை ஒரு முறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்


மழைக்காலத்திற்கு சுடச்சுட சாப்பிட வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். அப்படி செய்த உடனே சுடச்சுட சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு வகைகள் என்று பல இருக்கின்றன. அதிலும் ஒன் பாட் உணவு வகைகள் இது போன்ற நேரங்களில் சாப்பிட மிகவும் ஏற்றதாக இருக்கும். அவ்வாறு தக்காளி சாதம், பிரிஞ்சி சாதம், தேங்காய் சாதம், பிரியாணி போன்ற உணவு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும். இவற்றை அடிக்கடி நமது வீடுகளில் செய்திருப்போம். ஆனால் முதல்முறையாக கத்தரிக்காயை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த பிரியாணியை இவ்வாறு செய்து பாருங்கள். இதன் சுவை சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – கால் கிலோ, அரிசி – 2 டம்ளர், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 5, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், பிரிஞ்சி இலை – ஒன்று, பட்டை சிறிய துண்டு – 1, சோம்பு – அரை ஸ்பூன், கல்பாசி – அரை ஸ்பூன், கிராம்பு – 2, ஏலக்காய் – 2, எண்ணெய் – 50 கிராம், உப்பு – ஒன்றரை ஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, புதினா – ஒரு கொத்து.

செய்முறை: முதலில் இரண்டு டம்ளர் அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பிறகு தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு கத்தரிக்காயையும் நடுவே கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் அடுப்பை பற்ற வைத்து, குக்கரை அதன்மீது வைத்து, 50 கிராம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் கல்பாசி சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு கத்தரிக்காயை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கத்தரிக்காய் ஓரளவு வதங்கியதும், இதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி, அதன் பின் ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த் தூள், ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இரண்டு டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் அரிசியை தண்ணீர் வடித்து இதனுடன் சேர்த்து விட்டு, கொத்தமல்லி தழை மற்றும் புதினா சேர்த்து குக்கரை மூடி போட்டு மூடி விடவேண்டும். குக்கரில் இருந்து பிரஷர் வர ஆரம்பித்ததும் குக்கர் விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்துவிட வேண்டும். பிறகு குக்கரை திறந்து பரிமாறினால் போதும் சுவையான கத்தரிக்காய் பிரியாணியின் சுவை அனைவரையும் தன் வசப்படுத்தும்.

No comments:

Post a Comment