pottu-kadalai-chutney-recipe-(பொட்டுக்கடலை சட்னி) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday 7 November 2021

pottu-kadalai-chutney-recipe-(பொட்டுக்கடலை சட்னி)

Pottu Kadalai Chutney Recipe In Tamil

பொட்டுக்கடலை சட்னி

தேவையான பொருட்கள்:

* துருவிய தேங்காய் - 1 கப்

* பொட்டுக்கடலை - 1/2 கப்

* பச்சை மிளகாய் - 2

* உப்பு - சுவைக்கேற்ப

* தண்ணீர் - தேவையான அளவு


தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

* கடுகு - 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.


No comments:

Post a Comment