kara-puthina-chutney(இட்லி, தோசை, அடைக்கு தொட்டுக்கொள்ள கார புதினா சட்னி இப்படி செஞ்சா கண்டிப்பாக திரும்பத் திரும்ப கேட்பாங்க! அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும்.) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 13 November 2021

kara-puthina-chutney(இட்லி, தோசை, அடைக்கு தொட்டுக்கொள்ள கார புதினா சட்னி இப்படி செஞ்சா கண்டிப்பாக திரும்பத் திரும்ப கேட்பாங்க! அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும்.)

இட்லி, தோசை, அடைக்கு தொட்டுக்கொள்ள கார புதினா சட்னி இப்படி செஞ்சா கண்டிப்பாக திரும்பத் திரும்ப கேட்பாங்க! அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும்.


இட்லி, தோசை, அடை போன்ற டிஃபன் வகைகள் அனைத்திற்கும் சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த கார புதினா சட்னியை நீங்களும் ஒரு முறை இதே அளவுகளில் செய்து பாருங்கள். ரவை தோசை, கோதுமை தோசை, அடை தோசை போன்ற விதவிதமான தோசைக்கு தொட்டுக் கொள்ள இந்த புதினா சட்னி சூப்பர் சைட் டிஷ் ஆக இருக்கும். இதை எப்படி நாமும் செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

கார புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்: சமையல் எண்ணெய் – 3 ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் – ஒரு கப், உரித்த பூண்டு பற்கள் – 15, பச்சை மிளகாய் – 4, தக்காளி – 2, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தழை – ஒரு கைப்பிடி, புதினா – ஒரு கட்டு, துருவிய தேங்காய் – ஒரு கப், கெட்டியாக கரைத்த புளித்தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு- தேவையான அளவு. தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – 2.

கார புதினா சட்னி செய்முறை விளக்கம்: முதலில் புதினா இலைகளை அலசி சுத்தம் செய்து கிள்ளி வைத்துக் கொள்ளுங்கள். மல்லி இலைகளையும் இதே போல் சுத்தம் செய்து கிள்ளி வைத்துக் கொள்ளுங்கள். தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயைப் பூ போல துருவி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வரும் பொழுது சீரகம், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். இவைகள் நன்கு வதங்கியதும் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் பச்சை மிளகாய்களை கீரை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். ஓரளவுக்கு இவை வதங்கி வந்ததும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து மசிய வதக்க வேண்டும். இதில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொன்றும் நன்கு பொன்னிறமாக வறுபட்டதும் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் இதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போனதும் பொடிப் பொடியாக வெட்டி வைத்துள்ள மல்லி தழைகளையும், புதினா இலைகளையும் சேர்த்து வதக்க வேண்டும்.

புதினா இலைகள் சுருள வதங்கியதும் அதில் நீங்கள் கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து விட வேண்டும். புதினா சேர்க்கும் பொழுது புளி சேர்த்தால் தான் ருசி அதிகம். துருவி வைத்துள்ள தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு வதக்கி பின்னர் அடுப்பை அணைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஆற விட்டு விடுங்கள். இவை நன்கு ஆறியதும் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த சட்னியை தாளிக்க வேண்டும்.

ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, ஒரு கொத்து கறிவேப்பிலை, வர மிளகாய் கிள்ளி சேர்த்து தாளித்துக் கொட்ட வேண்டும். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சூப்பரான வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த கார புதினா சட்னி எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் ஏற்றதாக இருக்கும், எனவே இதே முறையில் நீங்கள் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.


No comments:

Post a Comment