diwali-special-basundi-recipe(தீபாவளி ஸ்பெஷல்: பாசுந்தி) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 12 November 2021

diwali-special-basundi-recipe(தீபாவளி ஸ்பெஷல்: பாசுந்தி)

Diwali Special Basundi Recipe In Tamil

தீபாவளி ஸ்பெஷல்: பாசுந்தி

தேவையான பொருட்கள்:

* பால் - 1/2 லிட்டர்

* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்

* கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள் ஸ்பூன்

* நட்ஸ் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

* குங்குமப்பூ - சிறிது


* பொடித்த நட்ஸ் - 1 டீஸ்பூன்

* ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அவற்றில் சிறிதை எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அது பாதியாக குறையும் வரை காய்ச்ச வேண்டும். பால் பாதியாக குறைந்ததும், அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* பின் அதில் சிறிது குங்குமப்பூவை சேர்த்து கிளறி விட்டு, குறைவான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இந்நிலையில் இது மலாய் போன்று உருவாக ஆரம்பிக்கும். இப்போது அதை தொடர்ந்து கிளறி, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

* பாலானது சற்று கெட்டியாக மற்றும் க்ரீமியாக தெரியும் போது, அதில் நட்ஸ்களை சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* அதன் பின் பொடி செய்து வைத்துள்ள நட்ஸ் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி இறக்கி, குளிர வைத்து பின் பரிமாறினால், சுவையான பாசுந்தி தயார்.

No comments:

Post a Comment