crispey-ravai-bonda(கடலைமாவு சேர்க்காமல் ரவை மட்டும் பயன்படுத்தி இந்த மொறுமொறு போண்டாவை டீ போடும் நேரத்தில் சட்டென செய்து விடலாம்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 13 November 2021

crispey-ravai-bonda(கடலைமாவு சேர்க்காமல் ரவை மட்டும் பயன்படுத்தி இந்த மொறுமொறு போண்டாவை டீ போடும் நேரத்தில் சட்டென செய்து விடலாம்)

children-snacks

கடலைமாவு சேர்க்காமல் ரவை மட்டும் பயன்படுத்தி இந்த மொறுமொறு போண்டாவை டீ போடும் நேரத்தில் சட்டென செய்து விடலாம்


குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை அவர்களுக்கு விருப்பமான வகையில் செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிடுவார்கள். அவ்வாறு குழந்தைகளுக்கு சற்று மொறு மொறு என்று எதனை செய்து கொடுத்தாலும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி குழந்தைகளுக்கு பிடித்த ஒரு உணவு வகையை தான் இங்கு பார்க்க போகிறோம். மாலை வேளை வந்துவிட்டாலே சற்று சூடாக வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அந்த நேரத்தில் ரவை மற்றும் தயிரை பயன்படுத்தி இந்த சுவையான போண்டாவை எண்ணெயில் பொரித்து டீ சாப்பிடும் வேளையில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப், தயிர் – ஒரு கப், மைதா மாவு – கால் கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, சோடா உப்பு – அரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர். - 

- செய்முறை: முதலில் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாயையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அவ்வாறே கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையையும் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு கப் ரவை, ஒரு கப் தயிர், அரை ஸ்பூன் சோடா உப்பு, அரை ஸ்பூன் பெருங்காயம் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழையையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் சேர்க்கவேண்டும். சிறிது நேரத்தில் இவை உப்பி நன்றாக சிவந்து பொரிந்து வரும். இவ்வாறு அனைத்து மாவையும் எண்ணெயில் சேர்த்து போண்டா பொறித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தொட்டுக்கொள்ள ஏதேனும் ஒரு சட்னியை செய்து சாப்பிட்டு பாருங்கள். மிகவும் அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment