ராகி போண்டா
தேவையான பொருட்கள்:
* இட்லி மாவு - 2 கப்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* ராகி மாவு - 1/2 கப் முதல் 3/4 கப் வரை
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி மாவு, நறுக்கிய கேரட், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், ராகி மாவு, இஞ்சி, கறிவேப்பிலை,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இப்படி அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான ராகி போண்டா தயார்.
No comments:
Post a Comment