(tasty-kolukattai-gravy)இந்த கார கொழுக்கட்டை கிரேவி ஒன்று மட்டும் போதும். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்து டிபன் வகைகளுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday 3 October 2021

(tasty-kolukattai-gravy)இந்த கார கொழுக்கட்டை கிரேவி ஒன்று மட்டும் போதும். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்து டிபன் வகைகளுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும்

gravy

இந்த கார கொழுக்கட்டை கிரேவி ஒன்று மட்டும் போதும். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்து டிபன் வகைகளுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும்


எப்பொழுதும் காலை உணவிற்காக இட்லி, தோசை, பூரியுடன் தொட்டுக் கொள்ள அதே சாம்பார், சட்னியை தான் எப்பொழுதும் அதிகமாக செய்து கொண்டிருப்போம். எவ்வளவுதான் யோசித்துப் பார்த்தாலும் இதை தவிர வேறு எதையும் வித்தியாசமாக செய்யும் வகையில் எந்த ஒரு சுவையான உணவு வகையும் நமக்கு கிடைப்பதில்லை. ஆனால் இந்த காரக்கொழுக்கட்டை கிரேவியை ஒருமுறை செய்து டிபன் வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். இனிமேல் உங்கள் வீட்டில் எப்பொழுதும் தொட்டுக்கொள்ள இதை மட்டும் தான் அடிக்கடி செய்வீர்கள். இவ்வளவு சுவையான இந்த கார கொழுக்கட்டை கிரேவியை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

காரக்கொழுக்கட்டை கிரேவி செய்முறை விளக்கம்: முதலில் ஒரு பாத்திரத்தில் அரை கப் அரிசி மாவு, அரை கப் கடலைமாவு, அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரை ஸ்பூன் கார மிளகாய் தூள், அரை ஸ்பூன் உப்பு மற்றும் 100 கிராம் தயிர் சேர்த்து இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கொழுகட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் இதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். - பின்னர் இந்த கொழுக்கட்டைகளை இட்லி தட்டின் மீது அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அடுப்பின் மீது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக்கொண்டு, தண்ணீர் நன்றாக சூடானதும் இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து மூடி 10 நிமிடம் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.

பிறகு 2 வெங்காயம் மற்றும் 2 தக்காளியை தனித்தனியாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் நெய், அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அவை நன்றாக காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி பேஸ்டையும், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூள், அரை ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விட வேண்டும்.பின்னர் வேக வைத்துள்ள கொழுக்கட்டைகளை எடுத்து இந்த கிரேவியில் போட்டு ஒரு முறை கலைந்து விட்டு ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க விடவேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அனைத்து கிரேவியை கீழே இறக்கி வைக்க வேண்டும்.இந்த சுவையான கார கொழுக்கட்டை கிரேவியுடன் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என இவற்றில் எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். ஒருமுறை நீங்களும் இவ்வாறு செய்து சுவைத்துப் பாருங்கள். நாவில் நீர் சொட்டும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் மிகவும் அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment