இந்த சூப்பரான பூண்டு பொடியை செய்து வைத்துக்கொண்டால் போதும். இட்லி தோசை இவற்றில் எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் அவ்வளவு சுவையாக இருக்கும்
தினமும் வீட்டில் காலை உணவாக இட்லி தோசை என்பது தான் அதிகமாக இருக்கும். அவ்வாறு இவற்றிற்கு ஏற்றார்போல் சைடிஸ் செய்வது என்பது தினமும் ஒரு டாஸ்க் போன்று தான் இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள என்ன செய்வது என்று யோசிப்பதிலையே பாதி நேரம் கழிந்து விடும். தினமும் ஏதேனும் ஒரு சட்னியை செய்து வைத்தாலும் அது அலுப்பாக தான் இருக்கும். இதற்காக சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த பூண்டு பொடியை ஒரு முறை அரைத்து வைத்துக்கொண்டால் போதும் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் இதிலிருந்து கொஞ்சம் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சுவையான பூண்டு பொடியை எவ்வாறு செய்யலாம் என்று இந்தப் பதிவின்
மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்: பூண்டு – 200 கிராம், உளுத்தம் பருப்பு – 100 கிராம், கறிவேப்பிலை – இரண்டு கொத்து, பெருங்காயத் துண்டு – சிறியது, கருப்பு எள் – ஒரு ஸ்பூன், தேங்காய் துருவல் – கால் கப், எண்ணெய் – 10 ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன். -- செய்முறை: முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்க்க வேண்டும். சிறிது நேரத்தில் எள் பொரிய ஆரம்பித்தவுடன் அதனை ஒரு தட்ற்க்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல் கால் கப் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக சிவந்து வருமாறு பொரித்து கொள்ள வேண்டும்.
பின்னர் 200 கிராம் பூண்டை தோல் நீக்கி விட்டு நன்றாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து பொன்னிறமாக சிவந்து வருமாறு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே எண்ணெயில் கருவேப்பிலையை சேர்த்து நன்றாக பொரரிக்க வேண்டும்.
பின்னர் ஒரு சிறிய துண்டு பெருங்காயத்தையும் அதே கடாயில் சேர்த்து பொரித்து கொள்ள வேண்டும். இறுதியாக நூறு கிராம் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்றாக சிவந்து வருமாறு பொரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் பொரித்து
வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு தட்டில் சேர்த்து நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து அதனுடன் ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான பூண்டு பொடி தயார் ஆகிவிட்டது.
எப்பொழுதும் வீட்டில் இட்லி தோசை செய்யும் பொழுது அதனுடன் தொட்டுக்கொள்ள இந்தப் பொடியில் இருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிட்டோம் என்றால் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். இவ்வாறு நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் இதே பக்குவத்தில் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் வேலையும் மிச்சமாகும். இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையும் அதிகமாகும்.
No comments:
Post a Comment