tasty-beetroot-masala-koottu(சுவையான பீட்ரூட் கூட்டு ஒருமுறை இவ்வாறு மசாலா அரைத்து செய்து பாருங்கள். அற்புதமான சுவையில் இருக்கும்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday, 13 October 2021

tasty-beetroot-masala-koottu(சுவையான பீட்ரூட் கூட்டு ஒருமுறை இவ்வாறு மசாலா அரைத்து செய்து பாருங்கள். அற்புதமான சுவையில் இருக்கும்)

beetroot

சுவையான பீட்ரூட் கூட்டு ஒருமுறை இவ்வாறு மசாலா அரைத்து செய்து பாருங்கள். அற்புதமான சுவையில் இருக்கும்



ஒவ்வொரு வீட்டிலும் கூட்டு, பொரியல் என்று காய்கறிகளை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்ப்பது என்பதை பலரும் வழக்கமாக வைத்திருப்பார்கள். அதிலும் பீட்ரூட் வைத்து செய்யக்கூடிய எந்த உணவாக இருந்தாலும் அதனை விரும்பி சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவானவர்களே. ஆனால் பீட்ரூட்டில் உடம்பிற்க்கு தேவையான சத்துகள் அதிகமாக இருக்கிறன்றது. அது மட்டுமல்லாமல் இரத்தத்தை சுத்தம் செய்கிறது. உடம்பில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு உண்டாகும் உடல்நல குறைபாடு பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். வாருங்கள் இந்த பீட்ரூட்டை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு விவாத மசாலா சேர்த்து எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்: பீட்ரூட் – கால் கிலோ, கடலைப் பருப்பு – 100 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், பூண்டு – ஐந்து பல், தேங்காய் – 2 சில்லு, சீரகம் – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, எண்ணெய் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து. - 


- செய்முறை: பீட்ரூட்டை தோல் நீக்கி தண்ணீரில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் இரண்டு சில்லு தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதனை மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு பச்சை மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு 100 கிராம் கடலைப்பருப்பை தண்ணீரில் கழுவி குக்கரில் சேர்க்க வேண்டும்.பின்னர் கடலைப்பருப்புடன் அறிந்து வைத்துள்ள பீட்ரூட் வெங்காயம் மற்றும் தக்காளி இவை அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.பிறகு குக்கரை மூடி அடுப்பின் மீது வைத்து 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். அதன் பின் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை பீட்ரூட்டுடன் சேர்த்து ஒரு கொதி வரும் வரை அடுப்பை சிறிய தீயில் வைக்க வேண்டும்.பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டில் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் கூட்டு தயாராகிவிட்டது.

No comments:

Post a Comment