உளுந்து இனிப்பு பணியாரம்
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் மாவு - 1/2 கப்
* அரிசி மாவு - 1 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீபூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
* நெய் - சுடுவதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் உளுத்தம் மாவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின்பு பொடித்த வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். (இல்லாவிட்டால் கெட்டி வெல்லத்தை நீரில் போட்டு கரைத்து வடிகட்டி, பின் அந்த வெல்ல நீரை சேர்த்துக் கொள்ளலாம்.)
* பிறகு அதில் ஏலக்காய் பொடி மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, நீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி, முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான உளுந்து இனிப்பு பணியாரம் தயார்.
No comments:
Post a Comment