tasty-javvarisi-laddu-seimurai(1 கப் ஜவ்வரிசி இருக்கா? வாயில் வைத்தவுடன் கரையும் ஜவ்வரிசி லட்டு இப்படி ஒருவாட்டி செய்து பாருங்கள் செம்மயா இருக்கும்!) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday, 13 October 2021

tasty-javvarisi-laddu-seimurai(1 கப் ஜவ்வரிசி இருக்கா? வாயில் வைத்தவுடன் கரையும் ஜவ்வரிசி லட்டு இப்படி ஒருவாட்டி செய்து பாருங்கள் செம்மயா இருக்கும்!)

1 கப் ஜவ்வரிசி இருக்கா? வாயில் வைத்தவுடன் கரையும் ஜவ்வரிசி லட்டு இப்படி ஒருவாட்டி செய்து பாருங்கள் செம்மயா இருக்கும்!



ஜவ்வரிசி பாயாசத்துக்கு மட்டும் இல்லைங்க! லட்டு, அல்வா கூட செஞ்சு சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப சுவையாக வாயில் வைத்தவுடன் டக்கென கரைந்துவிடும் இந்த ஜவ்வரிசி ஸ்வீட் நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும். கடலை மாவு கொண்டு செய்யப்படும் லட்டை விட, இந்த ஜவ்வரிசி லட்டு ரொம்பவே வித்தியாசமான சுவையாக இருக்கும். நீங்களும் ஒருமுறை இப்படி முயற்சி செய்து பாருங்கள் வீட்டில் இருக்கும் எல்லோரும் பாராட்டி தள்ளி விடுவார்கள். ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.ஜவ்வரிசி லட்டு செய்ய

 தேவையான பொருட்கள்: பொடி ஜவ்வரிசி – 1 கப், நெய் – 5 டேபிள் ஸ்பூன், பாதாம் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி – 2 டேபிள்ஸ்பூன், திராட்சை – 1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 1 கப், ஃபுட் கலர் – 2 சிட்டிகை, ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை. - - 


ஜவ்வரிசி லட்டு செய்முறை விளக்கம்: 

முதலில் ஜவ்வரிசியை பொடிப்பொடியாக சிறிய அளவில் இருக்குமாறு பார்த்து வாங்கிக் கொள்வது அவசியமாகும். ஜவ்வரிசி அளவுகள் வெவ்வேறானதாக இருக்கும். பெரிய ஜவ்வரிசி வாங்கினால் லட்டு பிடிப்பதற்கு நன்றாக இருக்காது. எனவே குட்டி குட்டியாக இருக்கும் ஜவ்வரிசியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் ஜவ்வரிசியை இரண்டிலிருந்து மூன்று முறை நன்கு தண்ணீரில் அலசிக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் தூசு, தும்புகள் வெளியில் வந்துவிடும். பின்னர் மூன்று மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு நான்ஸ்டிக் பேனை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டுக் கொள்ளுங்கள்.

நெய் சூடானதும் அதில் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள முந்திரி, பாதாம், திராட்சை போன்றவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே நான்ஸ்டிக் பேனில் கூடுதலாக 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு காய விடுங்கள். நன்கு காய்ந்ததும் அதில் நீங்கள் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை நன்கு வடிகட்டி தண்ணீர் இல்லாமல் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் எல்லா இடத்திலும் நன்றாக கலந்து வர ஜவ்வரிசியை இடைவிடாமல் பொறுமையாக பிரட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இங்கு தான் உங்களுக்கு நேரம் எடுக்கும். குறைந்தது ஏழிலிருந்து, எட்டு நிமிடம் வரை இவ்வாறு வறுத்து விட ஜவ்வரிசி நன்கு வெந்து வந்திருக்கும்.பின்னர் ஒரு கப் அளவிற்கு சர்க்கரை எடுத்து மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை பொடியாக இருந்தால் தான் ஜவ்வரிசியுடன் சீக்கிரம் சேர்ந்து கரையும். கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை பொடியை சேர்த்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரை உருகி நன்கு கலந்து வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் இரண்டு சிட்டிகை அளவிற்கு ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் ஏலக்காயை தூள் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லா வகையான இனிப்பு வகைகளுக்கும் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்த்தால் இனிப்பை கூடுதலாகக் கூட்டிக் கொடுக்கும். எனவே ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளுங்கள்.பின்னர் நீங்கள் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை சேர்த்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை இறுதியாக சேர்த்து 2 நிமிடம் நன்கு கலந்து விட்டால் ஜவ்வரிசி லட்டு செய்ய தேவையான அல்வா பதமாக நமக்கு கிடைத்துவிடும். கை பொறுக்கும் அளவிற்கு சூடு ஆறியதும் லட்டு போல உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அப்படியே சாப்பிட வேண்டும் என்றாலும் அல்வாவாக செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். ரொம்ப ரொம்ப சுவையான டேஸ்டான இந்த ஜவ்வரிசி அல்வா உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

No comments:

Post a Comment