pasi-paruppu-chutney(இப்படியும் ஒரு சட்னி அரைக்கலாமா? பாசிப்பருப்பை வைத்து வித்தியாசமான சட்னி ரெசிபி உங்களுக்காக.) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday 14 October 2021

pasi-paruppu-chutney(இப்படியும் ஒரு சட்னி அரைக்கலாமா? பாசிப்பருப்பை வைத்து வித்தியாசமான சட்னி ரெசிபி உங்களுக்காக.)

chutney

இப்படியும் ஒரு சட்னி அரைக்கலாமா? பாசிப்பருப்பை வைத்து வித்தியாசமான சட்னி ரெசிபி உங்களுக்காக.


பெரும்பாலும் நம்முடைய வீட்டில் வெங்காயம் தக்காளி, பொட்டு கடலை கடலை, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பை வைத்து கூட சட்னி அரைப்போம். ஆனால் முற்றிலும் வித்தியாசமாக பாசிப்பருப்பில் சுவையான சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா. இந்த பதிவின் மூலம் இந்த சுவையான சிம்பிளான ரெசிபியை தெரிந்து கொள்வோமா. இந்த சட்னியை இட்லி தோசை சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக வைத்துக்கொள்ளலாம். அருமையாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரகூடிய ரெசிபியும் கூட இது.

முதலில் 1/2 கப் அளவு பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பாசிப்பருப்பை போட்டுக்கொள்ளுங்கள். பாசிப் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டாம். ட்ரை ரோஸ்ட் செய்தாலே போதும். வறுத்த பாசிப் பருப்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிடும் அளவிற்கு ஒரு வறுக்க வேண்டும். கடாயில் பாசிப் பருப்பு வறுபட்ட உடன் அதை உடனேயே வேறொரு தட்டிற்கு மாற்றி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

பாசிப்பருப்பை வறுப்பதில் தான் சட்னியின் பக்குவம் உள்ளது. பாசிப்பருப்பு வறுபடாமல் இருந்தால் சட்னி கொழகொழவென மாறிவிடும். பாசிப்பருப்பு ரொம்பவும் சிவந்துவிட்டால் சட்னி கருகிய வாடை வீசும் ஜாக்கிரதை.

மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் வறுத்த பாசிப்பருப்பை போட்டு முதலில் பொடி செய்து கொள்ள வேண்டும். பொடி செய்த இந்த பாசிப்பருப்புடன் 1/2 கப் அளவு தேங்காய் துருவல், பச்சை மிளகாய் – 2, சிறிய இஞ்சித்துண்டு – 1, தேவையான அளவு உப்பு, சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு சட்னிபோல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

எந்த கப்பில் பாசிப்பருப்பு அளந்து எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே கப்பில் தேங்காயையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். சரியான அளவாக இருக்கும். மிக்ஸியில் அரைத்த இந்த சட்னியை கெட்டியாக அப்படியேவும் சாப்பிடலாம். அப்படியில்லையென்றால், சட்னியை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து ஒரு சிறிய தாளித்து சேர்த்தும் இந்த சட்னியை சாப்பிட்டுக் கொள்ளலாம்.

ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை, தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்து ருசித்துப்பாருங்கள் வித்தியாசமான சுவையில் வித்தியாசமான சட்னி தயார்.

No comments:

Post a Comment