nonveg-tast-potato-gravy/(கறி வறுவல் சுவையில் உருளைக்கிழங்கு வறுவலை செய்ய இந்த ஒரு மசாலாவை மட்டும் அதனுடன் சேர்த்து விடுங்கள். அப்படியே கறி தொக்கின் சுவைக்கு ஈடாக இருக்கும்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 3 October 2021

nonveg-tast-potato-gravy/(கறி வறுவல் சுவையில் உருளைக்கிழங்கு வறுவலை செய்ய இந்த ஒரு மசாலாவை மட்டும் அதனுடன் சேர்த்து விடுங்கள். அப்படியே கறி தொக்கின் சுவைக்கு ஈடாக இருக்கும்)

potato

கறி வறுவல் சுவையில் உருளைக்கிழங்கு வறுவலை செய்ய இந்த ஒரு மசாலாவை மட்டும் அதனுடன் சேர்த்து விடுங்கள். அப்படியே கறி தொக்கின் சுவைக்கு ஈடாக இருக்கும்


இந்த புரட்டாசி மாதத்தில் பல வீடுகளிலும் அசைவ உணவு சாப்பிடுவது என்பதை தவிர்த்து இருப்பார்கள். ஆனால் இதுவரை அதிகமாக அசைவம் சாப்பிட்டு வந்த அசைவப் பிரியர்களுக்கு அதன் ஏக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். இவ்வாறானவர்களுக்காக அசைவ உணவின் அதே சுவையில் உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிடுவதற்க்கு அதனுடன் ஒரு மசாலாவை மட்டும் தயார் செய்து சேர்த்துக் கொண்டால் போதும். அசைவ உணவையே மறக்கும் அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த மசாலா உருளைக்கிழங்கு தொக்கை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – கால் கிலோ, காளான் – 200 கிராம், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பட்டை – 2 துண்டு, கிராம்பு – 3, சோம்பு – ஒரு ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், ஏலக்காய் – 3, வர மிளகாய் – 4, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு அரை ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து. - Advertisement - செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் உருளைக்கிழங்கை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் காளானையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொண்டு அதேபோல் வெங்காயம் மற்றும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, வரமிளகாய், மிளகு மற்றும் சீரகம் இவை அனைத்தையும் சேர்த்து முதலில் கொர கொரப்பாக அரைத்துக் கொண்டு, பின்னர் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மறுபடியும் பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக சிவந்து வரும் வரை பொறித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதே எண்ணெயில் காளானையும் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் நன்றாக வதக்கி அது நன்றாக வறுபட்டதும் எண்ணெயில் இருந்து வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே கடாயில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை இதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். இவை நன்றாக வதங்கி கெட்டியாகி இவற்றிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் காளானை சேர்த்து நன்றாக பிரட்டி விட வேண்டும்.

இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் போதும் கரி சுவையை மிஞ்சும் அளவிற்கு அசத்தலான சுவையில் உருளைக்கிழங்கு காளான்தொக்கு தயாராகிவிடும். இதனை மட்டும் ஒரு முறை சாப்பிட்டு பார்த்தீர்கள் என்றால் இதன் சுவையில் அசைவ உணவையே மறந்துவிடுவீர்கள்.

No comments:

Post a Comment