navil-karaiyum-karuvattu-kulambu(சொன்னவுடனே வாயில் நீர் ஊரூம் கருவாட்டு குழம்பை ஒருமுறை பக்குவமாக இப்படி வைத்துப் பாருங்கள்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 3 October 2021

navil-karaiyum-karuvattu-kulambu(சொன்னவுடனே வாயில் நீர் ஊரூம் கருவாட்டு குழம்பை ஒருமுறை பக்குவமாக இப்படி வைத்துப் பாருங்கள்)

karuvadu

சொன்னவுடனே வாயில் நீர் ஊரூம் கருவாட்டு குழம்பை ஒருமுறை பக்குவமாக இப்படி வைத்துப் பாருங்கள்


சாதத்துடன் சேர்த்து சாப்பிட சாம்பார், ரசம், காரக்குழம்பு இவ்வாறான குழம்பு வகைகளை செய்து வைத்தாலும் நாம் என்றாவது ஒருநாள் செய்யும் கருவாட்டுக்குழம்பின் சுவை இதில் எதற்கும் இருக்காது. கருவாட்டுக் குழம்பு என்று சொன்னவுடனே பலருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுடசுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த கருவாட்டுக் குழம்பு நல்ல மணத்துடன், அருமையான சுவையுடன் இருக்கும். அவ்வாறு அனைவருக்கும் பிடித்த ஒரு பக்குவமான கருவாட்டு குழம்பை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்: கருவாடு – கால் கிலோ, சின்ன வெங்காயம் – ஐந்து, பெரிய தக்காளி – 2, புளி – எலுமிச்சம்பழ அளவு, முருங்கைக்காய் – 2, கத்தரிக்காய் – 5, மிளகாய் தூள் – 5 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 8 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், தேங்காய் – அரைமூடி, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து. - 

- செய்முறை

முதலில் கருவாட்டை சுத்தம் செய்து நன்றாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரை மூடி தேங்காயைத் சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் முருங்கைக்காய் மற்றும் கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், முருங்கைக்காய்களை சேர்த்து அதனுடன் இரண்டு தக்காளி பழத்தை நன்றாக பிசைந்து சேர்க்கவேண்டும். பின்னர் இதனுடன் 5 ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள்தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அதனுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாடு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். அதன்பின் கலந்து வைத்துள்ள குழம்பை ஊற்றி காய்கள் வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.கத்தரிக்காய் மற்றும் முருங்கைக் காய் நன்றாக வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். அதன்பின் சிறிது நேரம் கழித்து அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து 5 நிமிடம் மட்டும் கொதிக்க வைத்து இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அணைத்துவிட வேண்டும்.அவ்வளவுதான் மணமணக்கும் கருவாட்டு குழம்பு தயாராகிவிட்டது. இதனுடன் சுடசுட சாதத்தை சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். அதன் சுவை எத்தனை நாள் ஆனாலும் உங்கள் நாவை விட்டு மறையாது.

No comments:

Post a Comment