gothumai-onion-pakoda(வெங்காய பக்கோடா) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 3 October 2021

gothumai-onion-pakoda(வெங்காய பக்கோடா)

pakoda

கடலைமாவு இல்லையா? கவலை வேண்டாம். கோதுமை மாவை வைத்து கூட இந்த வெங்காய பக்கோடாவை சூப்பரா 10 நிமிஷத்துல செய்யலாமே?


நம்மில் எல்லோரது வீட்டிலுமோ கடலை மாவை வைத்து தான் வெங்காய பக்கோடா செய்வோம். ஆனால் கடலைமாவு இல்லை என்றாலும் பரவாயில்லை. கோதுமை மாவை வைத்து ஆரோக்கியமான ஒரு வெங்காய பக்கோடா எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம்  தெரிந்து கொள்ளப் போகின்றோம். டீ போடும் டைம்ல சட்டுனு பத்தே நிமிடத்தில் இந்த வெங்காய பக்கோடா செய்வது எப்படி. தெரிஞ்சிக்கலாம் வாங்க.

இந்த வெங்காய பக்கோடா செய்ய முதலில் இரண்டு பெரிய வெங்காயங்களை எடுத்து நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ரொம்ப நைசாக வெட்டிவிட்டால் வெங்காயத்தை எண்ணெயில் போட்டு பொரித்து எடுப்பதற்குள் தீய்ந்துவிடும். ஓரளவுக்கு வெங்காயத்தை மொத்தமாக நீளவாக்கில் வெட்டி தனித்தனியாக உதித்து ஒரு அகலமான பவுலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

அரை கப் அளவு பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

வெட்டி வைத்திருக்கும் இந்த வெங்காயத்துடன், கோதுமை மாவு – 1 கப், பொட்டுக்கடலை மாவு – 1/2 கப், பொடியாக வெட்டிய பச்சைமிளகாய் – 2, பொடியாக நசுக்கிய பூண்டு பல் – 4, கருவேப்பிலை – 1 கொத்து பொடியாக நறுக்கியது, தேவையான அளவு உப்பு, தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து வெங்காயத்துடன் முதலில் நன்றாக கலந்து விடுங்கள். தண்ணீர் ஊற்றக்கூடாது. வெங்காயத்திலிருந்து விடும் தண்ணீரிலேயே இந்த மசாலாப் பொருட்கள் அனைத்தும் முதலில் கலக்க வேண்டும்.

அடுப்பில் பகோடா சுடுவதற்கு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொண்டே இருங்கள். அந்த எண்ணெய் சூடானதும் அதில் இருந்து ஒரு குழி கரண்டி அளவு எண்ணெயை எடுத்து பிசைந்து வைத்திருக்கும் மாவில் முதலில் ஊற்றி நன்றாக கரண்டியை வைத்து கலந்துவிட வேண்டும். இறுதியாக கொஞ்சமாக தண்ணீரை விட்டு உங்கள் கையைக் கொண்டு மாவை நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். ஒரு வெங்காயத்துயன் இன்னொரு வெங்காயம் மாவில் ஒட்டும் அளவிற்கு தண்ணீர் தெளித்து பிசைந்தால் போதும். நிறைய தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு போல மாற்றி விடக் கூடாது.

இப்போது நமக்கு வெங்காய பக்கோடா விடுவதற்கு மாவு தயார். எண்ணெய் சூடாகிக் கொண்டிருக்கிறது. அந்த எண்ணெயில் கொஞ்சம் மொத்தமாக இந்த வெங்காயங்களை எடுத்து உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூப்பரான வெங்காய பக்கோடா தயார். வெங்காயத்தை ரொம்பவும் உதிர்த்து எண்ணெயில் விட்டு விட்டால், எண்ணெயில் இருந்து எடுக்க கஷ்டமாகிவிடும். வெங்காயம் கருகிவிடும். கொஞ்சம் மொத்தமாகவே எண்ணெயில் விட்டு சிவக்க வைத்துக் கொள்ளுங்கள். இதன் சுவையை கடலை மாவில் சுட்ட வெங்காய பக்கோடாவை விட மிக மிக அருமையாக இருக்கும். ஒரு வாட்டி நீங்க உங்க வீட்ல ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

No comments:

Post a Comment