muttaikose-special-masala-in-tamil(கோஸ் பொரியல் சுவையைக் கூட்ட இந்த ஒரு மசாலாவை மட்டும் அதனுடன் சேர்த்து சமைத்திடுங்கள். கோஸ் பொரியல் அருமையான சுவையில் இருக்கும்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday, 13 October 2021

muttaikose-special-masala-in-tamil(கோஸ் பொரியல் சுவையைக் கூட்ட இந்த ஒரு மசாலாவை மட்டும் அதனுடன் சேர்த்து சமைத்திடுங்கள். கோஸ் பொரியல் அருமையான சுவையில் இருக்கும்)

cabbage

கோஸ் பொரியல் சுவையைக் கூட்ட இந்த ஒரு மசாலாவை மட்டும் அதனுடன் சேர்த்து சமைத்திடுங்கள். கோஸ் பொரியல் அருமையான சுவையில் இருக்கும்


சாம்பார், காரக்குழம்பு, புளிக்குழம்பு, கீரை குழம்பு, ரசம் இவ்வாறு எந்த வகை குழம்பு செய்தாலும் அவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதேனும் ஒரு காய்கறி பொரியலை செய்யவேண்டும். அவ்வாறு ஒவ்வொரு நாளும் என்ன காய்கறியை சமைப்பது என்று யோசிப்பது கொஞ்சம் சிக்கலான வேலையாகத்தான் இருக்கும். ஏனென்றால் வீட்டில் உள்ள சில நபர்களுக்கு ஒருவித காய்கள் பிடிக்காது. அதில் குறிப்பிட்ட வகையில் கோஸ் என்றால் பலருக்கும் பிடிப்பதில்லை. அதன் வாசனையே ஒரு சிலருக்கு பிடிக்காது. ஆனால் எப்பொழுதும் செய்யும் கோஸ் பொரியலை விட இதில் ஒருவித மசாலாவை சேர்த்து சமைத்து பாருங்கள். வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் அப்படி சுவையான கோஸ் பொரியலை எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

 கோஸ் – 300 கிராம், தேங்காய் – 2 சில்லு, பூண்டு – 3 பல், வர மிளகாய் – 5, சீரகம் – ஒரு ஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை: முதலில் 300 கிராம் கோஸை பொடியாக நறுக்கிக் கொண்டு அதனை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ள வேண்டும். பின்னர் 2 சில்லு தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் 3 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை, மூன்று வரமிளகாய் மற்றும் நறுக்கிய தேங்காய் இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம்பருப்பு, அரை ஸ்பூன் கடலைப் பருப்பு, சேர்த்து தாளிக்க வேண்டும்.அதன் பின் நறுக்கி வைத்துள்ள கோஸை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கோஸ் நன்றாக வதங்கியதும் அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கோஸை வேகவிட வேண்டும்.5 நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக பிரட்டிவிட வேண்டும். சேர்த்த மசாலா சிறிது நேரம் கோஸுடன் சேர்ந்து நன்றாக வதங்கியதும் அடுப்பிலிருந்து கீழே இறக்க வேண்டும். அதன் பின் இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இழைகளை தூவி கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கோஸ் பொரியல் தயாராகிவிட்டது. நீங்களும் இவ்வாறு ஒருமுறை மசாலா சேர்த்து சுவையான கோஸ் பொரியலை செய்து பாருங்கள். மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

No comments:

Post a Comment