tasty-semiya-bonda-seimurai(1 கப் சேமியா இருக்கா? 10 நிமிடத்தில் சேமியா போண்டா இப்படி செய்து பாருங்கள்! செம டேஸ்டியா இருக்கும்.) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday 13 October 2021

tasty-semiya-bonda-seimurai(1 கப் சேமியா இருக்கா? 10 நிமிடத்தில் சேமியா போண்டா இப்படி செய்து பாருங்கள்! செம டேஸ்டியா இருக்கும்.)

semiya-bonda2

1 கப் சேமியா இருக்கா? 10 நிமிடத்தில் சேமியா போண்டா இப்படி செய்து பாருங்கள்! செம டேஸ்டியா இருக்கும்.


விதவிதமான போண்டாக்கள் செய்து சாப்பிட்டாலும் இந்த மாதிரி சேமியா கொண்டு செய்யப்படும் போண்டாவை நீங்கள் செய்து பார்த்திருக்கிறீர்களா? சேமியாவை வேக வைத்து தேவையான பொருட்களை கலந்து செய்யும் இந்த போண்டா வித்தியாசமான சுவையுடன், அதீதமான ருசியுடன் இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள கார சாரமான கார சட்னி வைத்துக் கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு அலாதியான சுவை கொண்ட இந்த சேமியா போண்டா நீங்களும் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

சேமியா போண்டா செய்ய தேவையான பொருட்கள்: சேமியா – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – ஒன்று, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, சீரகம் – ஒரு டீஸ்பூன், மைதா மாவு – கால் கப், தயிர் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. - 

- சேமியா போண்டா செய்முறை விளக்கம்: முதலில் சேமியாவை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் சேமியா, பாயாசத்திற்கு பயன்படுத்தும் சேமியாவாக இருக்க வேண்டும். இந்த சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்கு வேக விடவும். சேமியா நன்கு வெந்து பொலபொலவென வர வேண்டும். தண்ணீர் வற்றி சேமியா வெந்ததும் அதனை ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளவும். பின்னர் அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

இஞ்சியை தோல் நீக்கி துருவி சேர்த்துக் கொள்ளலாம். அல்லது பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சைமிளகாய் ஒன்றை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கருவேப்பிலை கொத்தை உருவி பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் மைதா மாவு கால் கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு கூட நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம், இன்னும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இரண்டிலிருந்து மூன்று நிமிடம் கழித்து பின்னர் திருப்பி போட்டு கொள்ளுங்கள். இப்படி எல்லாப் புறமும் போண்டா நன்கு பொன்னிறமாக மொறு மொறுவென்று வெந்து வரும் வரை அடுப்பை மீடியமாக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக பத்தே நிமிடத்தில் சட்டென செய்து விடக் கூடிய இந்த சேமியா போண்டா நிச்சயம் வித்தியாசமான சுவையில் உங்களை சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.

No comments:

Post a Comment