kaiyendhi-bavan-veg-kuruma(கையேந்தி பவன் ஸ்பெஷல் வெஜிடபிள் குருமா இப்படித்தான் செய்யணும். ஸ்பெஷல் மசாலா அரவையுடன் ரெசிபி உங்களுக்காக._) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday, 13 October 2021

kaiyendhi-bavan-veg-kuruma(கையேந்தி பவன் ஸ்பெஷல் வெஜிடபிள் குருமா இப்படித்தான் செய்யணும். ஸ்பெஷல் மசாலா அரவையுடன் ரெசிபி உங்களுக்காக._)

kuruma

கையேந்தி பவன் ஸ்பெஷல் வெஜிடபிள் குருமா இப்படித்தான் செய்யணும். ஸ்பெஷல் மசாலா அரவையுடன் ரெசிபி உங்களுக்காக.


ரோட்டு கடைகளில் சப்பாத்திக்கு, பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள ஸ்பெஷலான வெஜிடபிள் குருமா சில கடைகளில் கிடைக்கும். அருமையாக இருக்கும். அதே போல ஒரு குருமாவை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சப்பாத்தி பூரி பரோட்டா தோசை இடியாப்பத்திற்க்கு இந்த குருமா செம சைட் டிஷ்ஷாக இருக்கும். வாங்க அந்த ரெசிபியை இப்பவே தெரிஞ்சிக்கலாம்.

முதலில் இந்த குருமா செய்வதற்கு ஸ்பெஷல் மசாலா பொருட்களை வறுத்து அரைக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி அது காய்ந்ததும், பட்டை – 2 துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 1, சோம்பு – 1 ஸ்பூன், வர மிளகாய் – 3, பச்சை மிளகாய் – 4, இந்த பொருட்களை சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், கறிவேப்பிலை – 1 கொத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன், மிளகு – 10 லிருந்து 15, சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக கசகசா – 1 ஸ்பூன், நறுக்கிய மீடியம் சைஸில் இருக்கும் தக்காளி பழம் – 2, உப்பு – 1 ஸ்பூன், புதினா – 10 இலைகள், மல்லி தழை – 2  கொத்து, இந்த பொருட்களை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் போல வதக்கிக் கொள்ள வேண்டும். (எல்லா மசாலா பொருட்களையும் ஒரே கடையில் ஒன்றாகப் போட்டு தான் வதக்க வேண்டும். மேலே சொன்னபடி அடுத்தடுத்து எந்தெந்த பொருட்களை சேர்க்க வேண்டுமோ, அதை முறையாக சேர்க்க வேண்டும்.) எல்லா மசாலாப் பொருட்களும் சேர்த்து கலந்துவிட்டு இறுதியாக 1/2 மூடி அளவு தேங்காய் துருவலை இதில் சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கி, அடுப்பை அணைத்துவிட்டு, எல்லா பொருட்களையும் அப்படியே நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். (கசகசா உங்களிடம் இல்லை என்றால் ஐந்து முந்தரி பருப்புகளை சேர்த்துக் கொள்ளலாம்.)

ஆரிய இந்த எல்லா மசாலா பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

இப்போது குருமா தாளிக்க அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கல்பாசி – 1 சிறிய துண்டு, லவங்கம் – 1, பட்டை – 1, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து இந்த எல்லா பொருட்களையும் வதக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை.

அடுத்தபடியாக கேரட் – 1, உருளைக்கிழங்கு – 1, பீன்ஸ் – 10, இந்த மூன்று காயையும் பொடியாக நறுக்கி குக்கரில் சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் போல வதக்கி விட்டு அதன் பின்பு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மல்லித் தூள் – 2 ஸ்பூன், சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக வதக்கி விடுங்கள். உங்கள் வீட்டில் காஷ்மீரி சில்லி பவுடர் இருந்தால் – 1 ஸ்பூன் இந்த இடத்தில் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு காய்கறிகள் வேறு ஏதாவது தேவை என்றாலும் சேர்த்துக்கொள்ளலாம். பச்சைப்பட்டாணி, காலிபிளவர் இது போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம் அது அவரவர் விருப்பம்.

No comments:

Post a Comment