வாயில் வைத்த உடனே கரையக்கூடிய ரங்கூன் ஸ்வீட்டை மூன்றே பொருள் வைத்து ஐந்தே நிமிடத்தில் சட்டென செய்துவிடலாம்
செய்வதற்கு ஈஸியாக இருக்கிறது என்பதற்காக பலரும் தங்கள் வீட்டில் அடிக்கடி செய்யக்கூடிய ஒரு ஸ்வீட் கேசரியாகத்தான் இருக்கும். ஆனால் அதனை சாப்பிட்டு பலருக்கும் அலுத்துப் போயிருக்கும். இவ்வாறு வீட்டில் உள்ளவர்களை அசத்துவதற்கும், உங்கள் வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்து விட்டால் சட்டென ஐந்தே நிமிடத்தில் செய்து கொடுப்பதற்கும் ஏற்றவாறு ஒரு சிம்பிளான ஸ்வீட்டை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப், நாட்டுச் சர்க்கரை – ஒன்றரை கப், முந்திரி – 15, நெய் – 5 ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், ஏலக்காய் – 4, தேங்காய் – அரை மூடி, உப்பு – ஒரு சிட்டிகை. - Advertisement - செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் நாட்டுச் சர்க்கரையுடன், நான்கு அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு, அதனை அடுப்பின் மீது வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். பின்னர் இதனை இறக்கி இதனுள் சிறிய கல், மண் ஏதும் இல்லாமல் சுத்தமாக வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் அரை மூடி தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் நெய் ஊற்றி கொண்டு ,அதில் 15 முந்திரியை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். பிறகு அதே கடாயில் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து அவற்றையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதனுடன் ஒரு கப் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் இதனுடன் வடிகட்டி வைத்துள்ள சர்க்கரை தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். சிறிது நேரத்தில் இந்த கலவை கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றுடன் 4 ஏலக்காயை தட்டி சேர்த்துக்கொண்டு, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் இறுதியாக இரண்டு ஸ்பூன் நெய் மற்றும் வறுத்த தேங்காய் துருவலை இவற்றுடன் சேர்த்து சிறிது நேரம் கைவிடாமல் கிளறி, கடாயை அடுப்பை விட்டு கீழே இறக்க வேண்டும். இதனை வேறு ஒரு தட்டிற்கு மாற்றி அதன் மீது வறுத்து வைத்த முந்திரியை பரவலாக தூவி விட வேண்டும். அவ்வளவுதான் ஐந்தே நிமிடத்தில் சட்டென செய்யக்கூடிய சுவையான ரங்கூன் ஸ்வீட் தயாராகிவிட்டது.
இங்கு கூறப்பட்டுள்ள முறையைப் பின்பற்றி நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். இதனை ஒருமுறை சுவைத்து விட்டீர்கள் என்றால் இனிமேல் ஸ்வீட் என்றாலே கேசரி எல்லாம் மறந்துபோய் இந்த ஒரு ஸ்வீட்டை மட்டும் தான் அடிக்கடி செய்து சாப்பிட்டு வருவீர்கள்.
No comments:
Post a Comment