இப்படி ஒரு பீன்ஸ் பொரியலை இதுவரைக்கும் யாரும் சாப்பிட்டிருக்கவும் மாட்டீங்க. சமைச்சிருக்கவும் மாட்டீங்க. மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை தெரிஞ்சு வச்சுக்கோங்க.
பீன்ஸ் பொரியல் எல்லோர் வீட்டிலும் செய்வதுதான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் பீன்ஸ் பொரியலை எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி ஒரு பீன்ஸ் பொரியலை நிச்சயமாக யாரும் சுவைத்து இருக்க மாட்டீங்க. ஒருவாட்டி இப்படி பீன்ஸ் பொரியல் செய்து டேஸ்ட் பண்ணிப் பாருங்க. நிச்சயமா திரும்ப திரும்ப இதை செஞ்சுகிட்டு இருக்கீங்க. சரி வாங்க அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.
முதலில் 50 கிராம் அளவு கடலைப்பருப்பு, 50 கிராம் அளவு துவரம்பருப்பு இந்த இரண்டு பருப்பையும் ஒன்றாக போட்டு நல்ல தண்ணீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பருப்பு ஊறியதும், இந்த பருப்பில் நன்றாக தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு கொள்ளுங்கள். இதோடு பூண்டு – 2 பல், வர மிளகாய் – 2, சோம்பு – 1/4 ஸ்பூன், சேர்த்து கொரகொரப்பாக பருப்பு வடைக்கு ஆட்டுவது போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் போது தண்ணீர் கொஞ்சம் கூட ஊற்றக் கூடாது.
இதை அப்படியே மசால்வடை போல லேசாக எடுத்து தட்டி, இட்லி பானையில் ஆவியில் வைத்து, எட்டு நிமிடங்கள் போல வேக வைத்துக் கொள்ளவும். இந்த பருப்பு வடைகளை நன்றாக ஆற வைத்துவிடுங்கள். ஆறிய பருப்பு வடைகளை உங்களுடைய கையாலேயே உதிர்த்தால் உதிரி உதிரியாக வந்துவிடும். வேகவைத்து எடுத்த பருப்பு தூள், அப்படியே இருக்கட்டும். இதைதான் பொறியியலில் சேர்க்கப் போகிறோம்.
300 கிராம் அளவு உள்ள பீன்ஸில் நார் நீக்கி பொடியாக பொரியலுக்கு வெட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.
இப்போது கடாயை அடுப்பில் வைத்து பொரியலை தாளிக்கலாம். கடாய் சூடானதும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வர மிளகாய் – 1, தாளித்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/2 கப் சேர்த்து 2 நிமிடங்கள் போல வெங்காயத்தை நன்றாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் வதங்கிய உடன் வெட்டி வைத்திருக்கும் பீன்சை கடாயில் சேர்த்து ஒரு முறை வதக்கி, பொரியலுக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் சேர்த்து, நன்றாக கலந்து விட்டு காய் வேகும் அளவிற்கு தண்ணீர் தெளித்து காயை மூடி வேக வைத்துக் கொள்ளுங்கள்.
காய் நன்றாக வெந்து வந்தவுடன், காயில் தண்ணீர் அனைத்தும் சுண்டியவுடன், முதலில் பருப்பை வேக வைத்து பொடித்து வைத்திருக்கும் அல்லவா, அதை காயோடு சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அணைத்து விட்டால், சூப்பரான பீன்ஸ் பருப்பு உசிலி தயார். நிச்சயமா இதோட சுவை சூப்பரா இருக்குங்க. வேணும்னா நீங்க ஒருவாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.
No comments:
Post a Comment