curd-brinjal-gravy-recipe(தயிர் கத்திரிக்காய் கிரேவி) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 9 October 2021

curd-brinjal-gravy-recipe(தயிர் கத்திரிக்காய் கிரேவி)

Curd Brinjal Gravy Recipe In Tamil

தயிர் கத்திரிக்காய் கிரேவி

தேவையான பொருட்கள்:

* கத்திரிக்காய் - 5 (நறுக்கியது)

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

* தயிர் - 1 கப்

* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1-1/2 டீஸ்பூன்

* சோம்பு பவுடர் - 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

* உப்பு - சுவைக்கேற்ப

* வரமிளகாய் - 3

* எள்ளு விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - தேவையான அளவு

* சீரகம் - 1 டீஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

* கிராம்பு - 2

* ஏலக்காய் - 2

* பிரியாணி இலை - 1

* பட்டை - 1 இன்ச்

* கறிவேப்பிலை - சிறிது

* இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பௌலில் தயிர், கடலை மாவு சேர்த்து கட்டிகள் சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகள் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் உளுத்தம் பருப்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் தயிர் கடலை மாவு கலவை, மசாலாப் பொடிகள் என அனைத்தையும் சேர்த்து ஒருசேர கிளறி விட வேண்டும்.

* பின்னர் வதக்கி குளிர வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலாவுடன் கத்திரிக்காய் நன்கு ஒன்றுசேரும் வரை கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தயிர் கத்திரிக்காய் கிரேவி தயார்.

No comments:

Post a Comment