சீஸ் கார்லிக் பிரட்
தேவையான பொருட்கள்:
* பிரட் துண்டுகள் - 5
* எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 பல் (துருவியது)
* உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/4 டீஸ்பூன்
* மொஸெரெல்லா சீஸ் - 1 கப் (துருவியது)
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ஆலிவ் ஆயில், துருவிய பூண்டு, உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் பிரட் துண்டுகளின் மீது இந்த எண்ணெயைத் தடவ வேண்டும்.
* பின்பு அதன் மேல் துருவிய மொஸெரெல்லா சீஸ் தூவி விட வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக் கல் அல்லது தவாவை அடுப்பில் வைத்து, நன்கு சூடானதும், இந்த பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக கல்லில் வைத்து குறைவான தீயில், சீஸ் உருகும் வரை வைத்து எடுத்தால், சுவையான சீஸ் கார்லிக் பிரட் தயார்.
No comments:
Post a Comment