கொண்டைக்கடலையை வச்சு தோசை கூட சுடலாமா? அது எப்படி செய்யறது. உங்களுக்கு தெரிஞ்சுக்க ஆசையா இருக்க?
கொண்டைக்கடலையை வைத்து சூப்பரான ஒரு தோசை ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கொண்டைக்கடலையை வைத்து தோசை சுட்டு தந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட்டு விடுவார்கள். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும். அதே சமயம் நாவிற்கு சுவை தரும் ரெசிபி யாகவும் இருக்கும். இந்த தோசை செய்வது எப்படி. இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இந்த தோசைக்கு கொண்டை கடலை – 1 கப் அளவு, இட்லி அரிசி – 1/4 கப் அளவு நமக்கு தேவைப்படும். முதலில் கொண்டைக்கடலையை எடுத்து முதல் நாள் இரவே ஊற வைத்துவிடுங்கள். கொண்டைக்கடலை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வேண்டும். அரிசி ஆட்டுவதற்கு 2 மணி நேரம் முன்பு ஊற வைத்துக் கொண்டால் போதும்.
மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த கொண்டைக்கடலையை தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் சேர்த்து கொள்ளவேண்டும். ஊறவைத்த அரிசியையும் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் சேர்த்து கொள்ளவேண்டும். இப்போது இந்த இரண்டு பொருட்களோடு வர மிளகாய் – 2, பூண்டு பல் – 5, சோம்பு – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை சேர்த்து மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.
மிக்ஸி ஜாரில் இந்த மாவு கொரகொரவென தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். மிக்ஸியில் அரைத்த மாவை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து தோசை கல்லில் எப்போதும் போல தோசை வார்த்து, நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் சிவக்க வைத்து பரிமாறினால் ஆரோக்கியமான சுவையான கருப்பு கொண்டைக்கடலை தோசை தயார்.
இந்த தோசையை வாரத்தில் ஒரு நாள் செஞ்சு கொடுத்தா கூட போதுங்க. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். கொண்டைக்கடலையை நிறைய பேர் முழுசாக கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இப்படி தோசை சுட்டு கொடுக்கலாமே.இதற்கு சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி சாம்பார் எதை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய இஷ்டம் தான். இந்த குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருக்கா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க
No comments:
Post a Comment