batchular-puliyodharai-recipe(பேச்சுலர்களும் சுலபமாக செய்யக்கூடிய இந்த உடனடி புளியோதரையை சட்டென குக்கரிலும் சமைத்து விடலாம்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 3 October 2021

batchular-puliyodharai-recipe(பேச்சுலர்களும் சுலபமாக செய்யக்கூடிய இந்த உடனடி புளியோதரையை சட்டென குக்கரிலும் சமைத்து விடலாம்)

puli

பேச்சுலர்களும் சுலபமாக செய்யக்கூடிய இந்த உடனடி புளியோதரையை சட்டென குக்கரிலும் சமைத்து விடலாம்


புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம் இதுபோன்ற கலவை சாதங்கள் பலருக்கும் மிகவும் பிடித்தவையாக இருக்கின்றன. ஆனால் தங்களின் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்குச் சென்று அங்கேயே தங்கி வேலை பார்க்கும் பேச்சுலர்களுக்கு இது போன்ற உணவுகளை நினைத்து உடனே சமைத்து சாப்பிட முடியாது. ஏனென்றால் இவற்றை சமைப்பதற்கான பக்குவம் அவர்களுக்கு சரியாக தெரிந்திருக்காது. ஆனால் இந்த பதிவில் சொல்லப்படும் முறைகளை சரியாக செய்தால் பேச்சுலராக இருந்தாலும் குக்கரிலேயே ஈசியாக புளியோதரை சாதத்தை சமைத்து விடலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: அரிசி – 21/2 கப், புளி – எலுமிச்சை பழ அளவு, வர மிளகாய் – 10, பூண்டு – பத்து பல், தனியா – 11/2 ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், வெள்ளை எள் – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – 100 கிராம், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், வேர்க்கடலை – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன். - Advertisement - செய்முறை: முதலில் அரிசியை நன்றாக கழுவி ஒரு வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவ்வாறு புளியையும் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து அரை ஸ்பூன் வெந்தயம் மற்றும் மிளகை சேர்த்து சிறிது நேரம் லேசாக வறுத்து அதனுடன் ஒன்றரை ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் எள், 5 வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் இவற்றை ஒரு தட்டில் சேர்த்து ஆற வைத்து அதன் பின் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது குக்கரை வைத்து 100 கிராம் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து நன்றாக பொரித்துக் கொண்டு அதனுடன் கறிவேப்பிலை மற்றும் பூண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இவை அனைத்தும் நன்றாக சிவந்ததும் புளி தண்ணீரை அளந்து ஊற்றிக் கொள்ளவேண்டும். இரண்டரை டம்ளர் அரிசிக்கு 5 டம்ளர் அளவு தண்ணீர் இருக்குமாறு ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்க்க வேண்டும். புளி தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஊற வைத்துள்ள அரிசியை இதனுடன் சேர்த்து ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் சாதம் நன்றாக கொதி வந்தவுடன் குக்கரை மூடி 2 விசில் வரும் வரை காத்திருக்க வேண்டும்.அதன் பின் குக்கரை இறக்கி வைத்து அதில் பிரஷர் குறைந்ததும் குக்கர் மூடியைத் திறந்து ஒரு முறை கலந்து விட்டால் போதும் சுவையான புளியோதரை சாதம் தயாராகிவிடும். நீங்களும் ஒருமுறை புளியோதரை சாதத்தை இவ்வாறு செய்து சுவைத்துப் பாருங்கள் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

No comments:

Post a Comment