அட்டகாசமான சுவையில் அருமையான தட்டைப்பயிறு சாதம் இப்படி செஞ்சு பாருங்க. எல்லாப் பொருட்களையும் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்தால், ஆரோக்கியமான லஞ்ச் தயார். - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday 13 October 2021

அட்டகாசமான சுவையில் அருமையான தட்டைப்பயிறு சாதம் இப்படி செஞ்சு பாருங்க. எல்லாப் பொருட்களையும் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்தால், ஆரோக்கியமான லஞ்ச் தயார்.

thattai-payaru-sadam

அட்டகாசமான சுவையில் அருமையான தட்டைப்பயிறு சாதம் இப்படி செஞ்சு பாருங்க. எல்லாப் பொருட்களையும் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்தால், ஆரோக்கியமான லஞ்ச் தயார்.உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து கொடுத்தால் குழம்பு வைத்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். பயிர் வகைகளை வைத்து ஒரு கலவை சாதம் போல செய்து கொடுத்தால் சாதத்தோடு சேர்த்து சத்து நிறைந்த பயிறு வகைகளும் வயிற்றுக்குள் சென்றுவிடும். ஆரோக்கியம் நிறைந்த தட்டைபயிறு சாதம் குக்கரில் சுலபமாக எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

முதலில் 1 கப் அளவு சாப்பாடு அரிசியை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளுங்கள். கிராம் கணக்கில் பார்த்தால் 200 கிராம் அளவு அரிசிக்கு கீழே சொல்லப்படும் பொருட்கள் சரியாக இருக்கும். ஒரு கைப்பிடி அளவு தட்டை பயிரை எடுத்து தண்ணீரில் போட்டு 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும். உங்களுக்கு தேவைப்பட்டால் பச்சரிசி பாஸ்மதி அரிசியிலும் இந்த தட்டப்பயிறு சாதத்தை செய்யலாம். அது அவருடைய விருப்பம் தான்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். ‌எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 4, வர மிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, இந்த பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் மீடியம் சைஸில் இருக்கும் – 2 பொடியாக தக்காளி பழங்களைப் பொடியாக நறுக்கி சேர்த்து, உப்பு – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், போட்டு தக்காளியை குழைய வதக்கி சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து, ஊற வைத்திருக்கும் தட்டை பயிரை குக்கரில் போட்டு மீண்டும் ஒருமுறை வதக்கி கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக 1 கப் அளவு அரிசிக்கு, 2 கப் அளவு தண்ணீர் போதுமானது. இரண்டு கப் அளவு தண்ணீரை குக்கரில் ஊற்றி, இந்த சாதத்திற்கு தேவையான அளவு உப்பு தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை போட்டு தண்ணீரை நன்றாக கொதிவந்ததும் ஊற வைத்திருக்கும் அரிசியை குக்கரில் போட்டு மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்துவிட்டு, குக்கரை மூடி விசில் போட்டு, 2 விசில் வைத்தால் போதும். அருமையான சாதம் தயாராகியிருக்கும்.

பின் குறிப்பு: உங்க வீட்டு அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவீர்களோ அந்த அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு அரசி எத்தனை விசில் வைத்தால் வேகமுமோ அத்தனை விசில் வைத்துக்கொள்ளுங்கள். சில பேர் வீடுகளில் 1 கப் அரிசிக்கு, இரண்டரை கப் தண்ணீர் சேர்ப்பார்கள். சில வீடுகளில் மூன்று விசில் வைத்தால் தான் சாதம் வேகும். அது அவரவர் வீட்டு அரிசியை பொருத்தது. அதையும் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment