karuvepilai-chutney(5 நிமிடத்தில் ஆரோக்கியமான சுவையான கறிவேப்பிலை சட்னி அரைப்பது எப்படி? வதக்க கூட வேண்டாம்.) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday, 14 October 2021

karuvepilai-chutney(5 நிமிடத்தில் ஆரோக்கியமான சுவையான கறிவேப்பிலை சட்னி அரைப்பது எப்படி? வதக்க கூட வேண்டாம்.)

கருவேப்பிலை

5 நிமிடத்தில் ஆரோக்கியமான சுவையான கறிவேப்பிலை சட்னி அரைப்பது எப்படி? வதக்க கூட வேண்டாம்.




ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, கொத்த மல்லித் தழை – 1/2 கைப்பிடி, தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, தோல் உரித்த பூண்டு பல் – 3, பொட்டுக்கடலை – 1 டேபிள்ஸ்பூன், நெல்லிக்காய் அளவு – புளி, தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு இந்த சட்னியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொஞ்சம் கட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சாப்பிடுவதற்கு சட்னி தயார். இப்படியே இந்த சட்னியை தாளிக்காமல் கூட சாப்பிடலாம். தேவைப்பட்டால் 2 ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், வரமிளகாய், போட்டு தாளித்து சட்னியில் போட்டு கலந்து சாப்பிடலாம்.


கொஞ்சம் இலசாக இருக்கக்கூடிய கருவேப்பிலையை சட்னிக்கு பயன்படுத்த வேண்டும். ரொம்பவும் முற்றிய கருவேப்பிலையை சட்னி அரைக்க பயன்படுத்தினால் சட்னியில் கருவேப்பிலையின் வாசனை அதிகமாக வீசும். சுவையில் வித்தியாசம் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.கஷ்டமே இல்லாமல் சட்டுனு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த சட்னி ரெசிபியை எல்லோர் வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். எல்லோரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பச்சையாக அழிக்கக்கூடிய கருவேப்பிலை சட்னியில் கட்டாயமாக கொத்தமல்லி தழை சேர்க்க வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது எல்லோர் வீட்டிலும் இந்த சட்னி அரைத்தால் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. உங்களுக்கு இந்த குறிப்பு புடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

No comments:

Post a Comment