எரியப்ப ரெசிபி / ஸ்வீட் தோசை செய்வது எப்படி
INGREDIENTS
அரிசி - 1/2 பெளல்
தண்ணீர் - 1 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் பொடி - 3/4 டேபிள் ஸ்பூன்
நெய் - 1/2 கப்
Red Rice Kanda Poha
Save PRINT
HOW TO PREPARE
1. ஒரு பெளலில் அரிசியை எடுத்து கொண்டு 3/4 பங்கு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
2. இரவில் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்னர் மீதமுள்ள தண்ணீரை
வடிகட்டி விடவும்
3. ஊற வைத்த அரிசியை மிக்ஸி சாரில் போட வேண்டும்.
4. துருவிய தேங்காயையும் அதனுடன் சேர்த்து வழுவழுவென அரைத்து கொள்ளவும்.
5. அதை ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளவும்
6. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வெல்லத்தை சேர்க்க வேண்டும்.
7. உடனடியாக 1/4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
8. வெல்லம் முழுவதுமாக கரைந்த பிறகு பாகுவை கொதிக்க விடவும்.
9. இப்பொழுது அரைத்து வைத்துள்ள மாவில் வெல்லப் பாகுவை சேர்க்கவும்.
10. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து மாவை நன்றாக பேட்டர் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
11. அடுப்பில் தோசைக் கல் அல்லது கடாயை வைத்து சூடானதும் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்ற வேண்டும்.
12. மாவை எடுத்து ஊற்றி வட்ட வடிவில் அல்லது பான் கேக் வடிவில் தோசை வார்க்கவும்.
13. ஒரு பக்கம் ப்ரவுன் கலர் ஆனதும் மறுபக்கம் திருப்பி இதே மாதிரி வேக விடவும்.
14. நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு சூடாக பரிமாறவும்.
INSTRUCTIONS
1.அரிசியை அரைப்பதற்கு முன்னாடி மீதமுள்ள தண்ணீரை முழுவதுமாக வடிகட்டுவது முக்கியம்.
2.இதற்கு தயாரிக்கும் பேட்டர் ஆனது சாதாரண தோசை மாவை விட சற்று கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
3.அரிசியை இரவிலே ஊற வைப்பது மென்மையான தோசையை கொடுக்கும்.
4.சில பேர்கள் தோசைக்கு பதிலாக பணியாரம் போன்ற எண்ணெய்யில்
பொரித்த வகைகளை இந்த பேட்டர் கொண்டு செய்து சாப்பிடுவர்.
NUTRITIONAL INFORMATION
பரிமாறும் அளவு - 2 தோசைகள்
கலோரிகள் - 149 கலோரி
புரோட்டீன் - 3 கிராம்
கார்போஹைட்ரேட் - 22 கிராம்
சுகர் - 2.8 கிராம்
நார்ச்சத்து - 1 கிராம்
No comments:
Post a Comment