சுலபமான முறையில் வேர்க்கடலை பர்பி செய்வது எப்படி?
INGREDIENTS
நிலக்கடலை பருப்பு -3/4 பெளல் (200 கிராம்)
வெல்லம் - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
Red Rice Kanda Poha
Save PRINT
HOW TO PREPARE
1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நிலக்கடலையை சேர்க்க வேண்டும்.
2. நிலக்கடலை பிரவுன் கலராக மாறி அதில் கருப்பு புள்ளிகள் தோன்றும் வரை வறுக்க வேண்டும்
3. அதை ஒரு தட்டிற்கு மாற்றி 5 நிமிடங்கள் குளிர வைக்கவும்.
4. உங்கள் உள்ளங்கைகளால் நிலக்கடலையை தேய்த்தால் அதிலுள்ள தோல்கள் உரிந்து விடும்.
5. இப்பொழுது கொஞ்சம் ஊதி விட்டால் தோல் தனியாக பிரிந்து விடும். நிலக்கடலையை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
6. இப்பொழுது தோலுரித்த நிலக்கடலையை ஒரு கிண்ணத்தை கொண்டு நசுக்கி லேசாக உடைத்து கொள்ளுங்கள்.
7. ஒரு தட்டை எடுத்து அதில் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் தடவவும்
8. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வெல்லத்தை சேர்க்க வேண்டும்
9. உடனடியாக 1/4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
10. வெல்லம் நன்றாக கரையும் வரை நன்றாக கிளறி விடவும். மிதமான தீயில் கொதிக்க விடவும்.
11. வெல்லப் பாகுவின் சரியான பதத்தை கண்டறிய பாகுவில் சில துளிகள் எடுத்து 1/4 கப் தண்ணீரில் விடவும்.
12. அதில் வெல்லப் பாகு பரவவில்லை என்றால் வெல்லப் பாகு சரியான பதத்தில் இருக்கிறது என்பதை உறுதிபடுத்தி விடலாம்.
13. அதனுடன் நிலக்கடலையை போட்டு நன்றாக கிளறவும்.
14. இந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டவும்
15. நன்றாக பரப்பி விட்டு மிதமான சூடு வரும் வரை 5 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.
16. அதே நேரத்தில் கத்தியில் நெய் தடவிக் கொள்ளவும்.
17. இப்பொழுது கலவையை செங்குத்தாக வெட்டவும்.
18. பிறகு கிடைமட்டமாக வெட்டி சதுர வடிவ துண்டுகளை பெறலாம்.
19. நன்றாக ஆறியதும் கவனமாக எடுத்து மிட்டாய்களை பரிமாறவும்.
INSTRUCTIONS
1.வீ்ட்டில் கடலையை வறுப்பதற்கு பதிலாக வறுத்த நிலக்கடலையையும் வாங்கி பயன்படுத்தலாம்.
2.நிலக்கடலையை உடைப்பது உங்கள் விருப்பம். சில பேருக்கு முழுக்கடலை பிடித்திருந்தால் அப்படியே வைத்துக் கொள்ளலாம்.
NUTRITIONAL INFORMATION
பரிமாறும் அளவு - 1 மிட்டாய்
கலோரிகள் - 150 கலோரிகள்
கொழுப்பு - 8 கிராம்
புரோட்டீன் - 4 கிராம்
கார்போஹைட்ரேட் - 17 கிராம்
சுகர் - 6.4 கிராம்
நார்ச்சத்து - 0.4 கிராம்
No comments:
Post a Comment