vegetable-oothapam-recipe(சத்தான... வெஜிடபிள் ஊத்தாப்பம்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 24 September 2021

vegetable-oothapam-recipe(சத்தான... வெஜிடபிள் ஊத்தாப்பம்)

Vegetable Oothapam Recipe In Tamil

சத்தான... வெஜிடபிள் ஊத்தாப்பம்

தேவையான பொருட்கள்:

* தோசை மாவு - தேவையான அளவு

* பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய தக்காளி - 1 டேபிள் ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1

* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் ஓரளவு கெட்டியான தோச ை மாவை எடுத்துக் கொள்ளவும்.

* பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி, பெரிய வட்டமாக சுற்றாமல், ஓரளவு மொத்தமாக சுற்றிக் கொள்ளவும்.

* பிறகு அதன் மேல் சிறிது வெஜிடபிளைத் தூவி, எண்ணெய் ஊற்றி, ஒரு மூடி கொண்டு 2 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்கவும்.

* பின் தோசையை திருப்பிப் போட்டு லேசாக தோசை கரண்டியால் அழுத்தி விட்டு, 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், வெஜிடபிள் ஊத்தாப்பம் தயார்.

இந்த வெஜிடபிள் ஊத்தாப்பத்திற்கு தேங்காய் சட்னி மிகவும் அற்புதமாக இருக்கும்.

குறிப்பு:

வெஜிடபிள் ஊத்தாப்பத்திற்கு தேவையான காய்கறிகள் முற்றிலும் உங்களது விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் வேகமாக வெந்துவிடும் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment