சின்ன வெங்காய தொக்கு
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 1 கப்
* பூண்டு - 2 பல்
* புளி - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, புளி, வர மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக குறைவான தீயில் குறைந்தது 10 நிமிடம், கெட்டியாகி நிறம் மாறும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* எப்போது அரைத்த வெங்காய பேஸ்ட்டின் நிறம் மாறுகிறதோ, அப்போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயத் தொக்கில் சேர்த்து கிளறினால், சுவையான சின்ன
வெங்காயத் தொக்கு தயார்.
குறிப்பு: இந்த வெங்காயத் தொக்கு 3 நாட்கள் வரை அறைவெப்பநிலையிலும், 10 நாட்கள் வரை ஃப்ரிட்ஜிலும் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment