குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி
தேவையான பொருட்கள்:
கோப்தாவிற்கு...
* ஜாமூன் மிக்ஸ் - 1 1/2 கப்
* துருவிய கேரட் - 1/4 கப்
* பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
கிரேவிக்கு...
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 5
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
* பால் - 1/3 கப்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், தக்காளி, முந்திரி போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக்
கொள்ளவும். விசில் போனதும், குக்கரில் உள்ளதை குளிர வைத்து, மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வாக்கி, பின் அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்து குறைவான தீயில் வேக வைக்கவும்.
* பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.
* அதன் பின் பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி, பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்துவிடவும்.
* அடுத்ததாக ஒரு பௌலில் குலாப் ஜாமூன் மிக்ஸ், துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து ஒருமுறை பிரட்டி விட வேண்டும்.
* பின் சிறிது நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள
உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் அந்த உண்டையை தயாரித்து வைத்துள்ள கிரேவியில் போட்டு, ஒரு 5 நிமிடம் ஊற வைத்து, பின் சப்பாத்தியுடன் பரிமாறினால், குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி தயார்.
No comments:
Post a Comment