ragi-halwa-recipe(ருசியான... ராகி அல்வா) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 25 September 2021

ragi-halwa-recipe(ருசியான... ராகி அல்வா)

Ragi Halwa Recipe In Tamil

ருசியான... ராகி அல்வா

தேவையான பொருட்கள்:

* ராகி மாவு - 1/2 கப்

* நெய் - 4 டேபிள் ஸ்பூன்

* சூடான பால் - 1 கப்

* சர்க்கரை - 1/4 கப்

* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

அலங்கரிக்க...

* பாதாம் - 6-7 (பொடியாக நறுக்கியது)

* பிஸ்தா - 6- (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், அதில் 1/2 கப் ராகி மாவை சேர்த்து 3-4 நிமிடம் குறைவான தீயில் கெட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும்.

* பின் அதில் 1/4 கப் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை உருக கிளறி விடவும்.

* பிறகு அதில் 1 கப் நன்கு சூடான பால் சேர்த்து தொடர்ந்து கிளறவும். பால் சேர்த்த பின் கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும்.

* எப்போது வாணலியில் ஒட்டாத பதத்தில் கலவை வருகிறதோ, அப்போது 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு இறக்கி, அதன் மேல் நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து அலங்கரித்தால், சுவையான ராகி அல்வா ரெடி!!!

No comments:

Post a Comment