plain-kurma-recipe-in-tamil(ப்ளைன் குருமா) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 25 September 2021

plain-kurma-recipe-in-tamil(ப்ளைன் குருமா)

Plain Kurma Recipe In Tamil

ப்ளைன் குருமா

தேவையான பொருட்கள்:

* வெங்காயம் - 2 (நறுக்கியது)

* தக்காளி - 3 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் - 2

* பட்டை - 1

* கிராம்பு - 2

* ஏலக்காய் - 1

* பிரியாணி இலை - 1

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1 கப்


* சோம்பு - 1/2 டீஸ்பூன்

* கசகசா - 1/4 டீஸ்பூன்

* முந்திரி - 4

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இல ை சேர்த்து தாளிக்கவும்.

* பின் அதில் பச்சை மிளகாயை முழுதாக சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்கவும்.

* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* பிறகு தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். தக்காளி வதங்குவதற்குள், மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக வைத்துக் கொள்ளவும்.


* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கி, சிறிது நீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

* அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ப்ளைன் குருமா ரெடி!

No comments:

Post a Comment