இறால் சுக்கா மசாலா
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 கப்
* வரமிளகாய் - 5
* பூண்டு - 4-5
* கறிவேப்பிலை - சிறிது
* சோம்பு - 2 டீஸ்பூன்
மசாலாவிற்கு...
* தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இறால் - 500 கிராம்
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் இறாலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* பின் மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு சிறிது நீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்ட
ு 1-2 நிமிடம் வதக்கவும்.
* பிறகு அதில் சுத்தம் செய்த இறால், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிட்டு, மூடி வைத்து 5-8 நிமிடம் வேக வைக்கவும்.
* பின் மூடியைத் திறந்து
பிரட்டி விட்டு ஒரு 2 நிமிடம் வேக வைக்கவும்.
* இறுதியில் மிளகுத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து சேர்த்து பிரட்டினால், சுவையான இறால் சுக்கா மசாலா தயார்!
No comments:
Post a Comment