சுவையான... க்ரீமி கேரட் சூப்
தேவையான பொருட்கள்:
* கேரட் - 3 (பொடியாக நறுக்கியது)
* பால் - 1/4 கப்
* தண்ணீர் - 1 கப் + 1/2 கப் கேரட்டை வேக வைப்பதற்கு
* பூண்டு - 5 பல்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* க்ரீம் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* பின் அதில் கேரட், 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* பின்பு அதில்
கேரட் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, கேரட்டை நன்கு மென்மையாக வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதில் உள்ள பிரியாணி இலை, பட்டை, கிராம்பை எடுத்து விட்டு, மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அரைத்த கேரட் பேஸ்ட் மற்றும் நீர் ஊற்றி நன்கு கட்டி இல்லாமல் கிளறி விடுங்கள்.
* சூப் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பால், 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் க்ரீம் சேர்த்தால், க்ரீமி கேரட் சூப் தயார்.
No comments:
Post a Comment