இந்த பொங்கலுக்கு ஈஸியா ஜிலேபி செய்வது எப்படி?
INGREDIENTS
மைதா - 1 கப்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 4 கப்கள்
குங்குமப் பூ - 4-5
பழ உப்பு - தேவைக்கேற்ப
குங்குமப் பூ கலர் பொடி - கொஞ்சம்
நெய் - 1 கப்
Red Rice Kanda Poha
Save PRINT
HOW TO PREPARE
மைதா மாவை கலக்குவதற்கு ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்
அதனுடன் கடலை மாவு மற்றும் தயிர் சேர்க்கவும்
நன்றாக தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கலக்கவும். மாவானது கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
இதை 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் அடுப்பில்
கடாயை வைத்து சூடானதும் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
அதனுடன் உடனடியாக தண்ணீர் ஊற்றி கருகுவதை தவிர்க்கவும்.
சர்க்கரை முழுவதும் கரையும் வரை காய்ச்சி 3-5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
குங்குமப் பூ மற்றும் கலர் பொடியை அதனுடன் சேர்க்கவும்
மிதமான தீயில் நன்றாக கிளறி இறக்கி ஓரமாக வைத்து விடவும்
இப்பொழுது கலந்து வைத்துள்ள மாவை எடுத்து அதில் பழ உப்பு சேர்த்து கலக்கியை கொண்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து அதன் மூடியை திறந்து கொண்டு அதன் மேல் ஒரு புனலை வைக்க வேண்டும்.
அந்த புனலின் வழியாக மாவை செலுத்த வேண்டும். பிறகு ஒரு துளையிட்ட மூடியால் மூடி விட வேண்டும்.
இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நெய் ஊற்றி உருகியதும் ஒரு 1-2 நிமிடங்கள் சூடாக வேண்டும்.
இப்பொழுது துளையிட்ட டப்பாவை மேலே பிடித்து கொண்டு சூடான நெய்யில் மாவை பிழிய வேண்டும்.
சுத்து முறுக்கு வடிவத்தில் ஒன்றுடன் ஒன்று
ஒட்டாத வண்ணம் தள்ளி தள்ளி பிழிய வேண்டும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை கவனமாக திருப்பி போட்டு பொரிக்க வேண்டும்.
இந்த செய்முறை முடிந்ததும் அதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.
பிறகு காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகுவில் 30 விநாடிகள் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதை எடுத்து வைத்து சர்க்கரை பாகு சொட்ட சொட்ட பரிமாறுங்கள்.
INSTRUCTIONS
1. தயிர் புளிப்பாக இருக்க கூடாது.
2. 6-7 மணி நேரம் மாவை வைத்தால் புளித்து விடும்.
3. உடனடியாக புளிப்பு சுவை தேவைப்பட்டால் மாவுடன் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள்
4. மைதாவின் அளவும் சர்க்கரை பாகுவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவும் சமமாக இருக்க வேண்டும்.
5. பழ உப்பு சேர்ப்பதால் ஜிலேபி நல்லா புஷ் என்று எம்பி வரும்.
NUTRITIONAL INFORMATION
பரிமாறும் அளவு - 1 ஜிலேபி
கலோரிகள் - 310 கலோரிகள்
கொழுப்பு - 10 கிராம்
புரோட்டீன் - 2 கிராம்
கார்போஹைட்ரேட் - 54 கிராம்
சர்க்கரை - 20 கிராம்
No comments:
Post a Comment