nuchinunde(கர்நாடக ஸ்டைல் காரசாரமான பருப்பு உருண்டை செய்வது எப்படி?) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday, 30 September 2021

nuchinunde(கர்நாடக ஸ்டைல் காரசாரமான பருப்பு உருண்டை செய்வது எப்படி?)

Nuchinunde

கர்நாடக ஸ்டைல் காரசாரமான பருப்பு உருண்டை செய்வது எப்படி?

INGREDIENTS
துவரம் பருப்பு - 1 பெளல்

தண்ணீர் - 1/2 லிட்டர் +3 கப்

முழு பச்சை மிளகாய் (சிறியது) - 10-20 (மிளகாயின் காரத்தன்மைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்)

இஞ்சி (தோலுரித்து) - 4 (1அங்குலம் அளவிற்கு)

தேங்காய் துருவல் - 1 கப்

தேங்காய் துண்டுகள்(நன்றாக நறுக்கியது) - 1/2 கப்

வெந்தயம் இலைகள் - 2 கப்

உப்பு - தேவைக்கேற்ப

சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - கீரிஸிங்

Red Rice Kanda Poha
Save PRINT
HOW TO PREPARE
1. துவரம் பருப்பை கலப்பதற்கு ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்

2. இப்பொழுது 3 கப் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். 5-6 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி விடவும்

3. முழு மிளகாயை மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும்

4. இப்பொழுது இஞ்சி துண்டுகளையும் அதனுடன் சேர்த்து கொள்ளவும்.

5. ஊற வைத்த துவரம் பருப்பில் ஒரு கைக்கரண்டி அளவு எடுத்து மிக்ஸி சாரில் சேர்க்கவும்.

6. கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

7. அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்

8. பிறகு மறுபடியும் ஒரு கைக்கரண்டி துவரம் பருப்பை அதே மிக்ஸி சாரில் போடவும்.

9. கொர கொரப்பாக அரைத்து அதையும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்

10. இந்த மேற்கண்ட முறையை நீங்கள் ஊற வைத்த துவரம் பருப்பு முழுவதையும் அரைக்கும் வரை செய்யவும்.

11. இது முடிந்ததும் தேங்காய் துருவலை சேர்க்கவும்

12. பிறகு அதனுடன் நறுக்கிய தேங்காய் துண்டுகளையும் சேர்த்து கொள்ளவும்

13. பிறகு வெந்தயம் இலைகள் மற்றும் உப்பு சேர்க்கவும்

14. எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்

15. பிறகு அதனுடன் சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

16. ஒரு இட்லி பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

17. இட்லி தட்டை அதன் மேல் வைக்க வேண்டும்.

18. இட்லி தட்டில் உள்ள குழிகளை எண்ணெய்யை கொண்டு தடவ வேண்டும்.

19. இப்பொழுது பருப்பு கலவையை கொஞ்சம் எடுத்து கைகளால் நீள் வட்ட வடிவில் பந்து மாதிரி உருட்ட வேண்டும்.

20. இந்த பந்துக்களை இட்லி தட்டில் வைக்க வேண்டும்

21. இப்பொழுது இட்லி பாத்திரத்தை மூடியால் மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்

22. மெதுவாக மற்றும் கவனமாக மூடியை திறந்து ஆவியுடன் கூடிய உருண்டைகளை எடுக்கவும்.

23. பிறகு அதை ஒரு தட்டிற்கு மாற்றி பரிமாறவும்.

INSTRUCTIONS
1.வெந்தயம் இலைகள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளுங்கள்.
2.வெந்தயம் இலைகளுக்கு பதிலாக கேரட் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கலாம்.

No comments:

Post a Comment